நான்சி மலர்
பவளம் (Coral) நவரத்தினங்களில் செவ்வாய் கிரகத்திற்கு உரிய ரத்தினமாகும். பவளம் அணிவதால் ஆன்மீக ரீதியாக கிடைக்கும் 10 முக்கிய பலன்கள்..
1/10. செவ்வாய் பகவான் வீரம் மற்றும் ஆற்றலுக்கு அதிபதி. பவளம் அணிவதன் மூலம் பயம் நீங்கி, மன உறுதி அதிகரிக்கும்.
2/10. வாழ்க்கையில் அல்லது தொழிலில் அடிக்கடி ஏற்படும் தேவையற்ற தடைகள், எதிர்ப்புகள் மற்றும் முட்டுக்கட்டைகளை நீக்கி வெற்றியைத் தரும் ஆற்றல் இதற்கு உண்டு.
3/10. ஜோதிட ரீதியாக செவ்வாய் வலுவிழந்தால் கடன் தொல்லைகள் ஏற்படலாம். பவளம் அணிவது கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடவும், பொருளாதார நிலைத்தன்மையைப் பெறவும் உதவும்
4/10. செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு பவளம் ஒரு சிறந்த தீர்வாகும். இது திருமணத்தில் ஏற்படும் தாமதங்களை நீக்கி, தம்பதிகளிடையே ஒற்றுமையை வளர்க்கும்.
5/10. பவளம் ஒரு கவசமாகச் செயல்பட்டு செய்வினை, கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகளிடமிருந்து அணிபவரைப் பாதுகாக்கும் ஆன்மீகத் தன்மையைக் கொண்டது.
6/10. உடலில் சோம்பல் குணம் நீங்கி, எப்போதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இது உதவும்.
7/10. செவ்வாய் பூமி காரகன் என்பதால், பவளம் அணிவது நிலம், வீடு அல்லது சொத்து தொடர்பான விவகாரங்களில் சாதகமான பலன்களைத் தரும்.
8/10. முன்கோபம் மற்றும் தேவையற்ற ஆத்திரத்தைக் குறைத்து, மனதை நிதானப்படுத்த உதவும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரியான முடிவுகளை எடுக்க இது வழிகாட்டும்.
9/10. பவளம் இரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவுகிறது. சரும நோய்கள், வயிற்றுப் புண் மற்றும் உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகளைக் குறைக்க மருத்துவ ரீதியாகவும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
10/10. மன ஒருமைப்பாட்டை (Focus) அதிகரித்து, தியானம் மற்றும் வழிபாடுகளில் முழுமையாக ஈடுபட பவளம் உதவுகிறது.