நம் முன்னோர்கள் பின்பற்றிய 10 முக்கிய (மூட)நம்பிக்கைகள்!

நான்சி மலர்

ம் முன்னோர்கள் பின்பற்றிய பல நம்பிக்கைகள் பின்னால் அறிவியல் காரணங்கள் ஒளிந்துள்ளன. காலப்போக்கில் அந்த காரணங்கள் மறைந்து, வெறும் பயம் கலந்த "மூடநம்பிக்கைகளாக" மட்டும் நம்மிடம் தங்கிவிட்டன. அவற்றில் 10 முக்கியமான மூடநம்பிக்கைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Superstitious belief of our ancestors

வெளியே செல்லும்போது ஒரு மைனாவைப் பார்த்தால் துரதிர்ஷ்டமாக அமையும். அதுவே இரண்டு மைனாக்களைப் பார்த்தால் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது.

Myna

வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்தால், ஏதோ பெரிய ஆபத்து வரப்போவதைக் குறிக்கிறது என்று அந்த உடைந்த கண்ணாடியை உடனடியாக அப்புறப்படுத்துவார்கள்.

Broken mirror

வீட்டு வாசலில் அமர்ந்து காகம் கரைந்தால், வீட்டிற்கு விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்று நம்பப்படுகிறது.

Crow

முக்கிய வேலைக்காக வெளியே கிளம்பும்போது யாராவது ஒருமுறை தும்மினால், சகுனம் சரியில்லை என்று கருதுவார்கள்.

Sneeze

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது என்றும், பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.

Eyes

திருமணம் அல்லது விசேஷங்களுக்குப் பணம் கொடுக்கும்போது ஒரு ரூபாய் நாணயத்தைச் சேர்த்து 501, 1001 என்று கொடுப்பார்கள். பூஜ்ஜியம் முடிவைக் குறிக்கும் என்றும், ஒன்று தொடர்ச்சியைக் குறிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

Indian marriage

மாலை விளக்கேற்றிய பிறகு வீட்டைப் பெருக்கினால், வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியேறிவிடுவார் என்பது பல குடும்பங்களில் கடைபிடிக்கப்படும் நம்பிக்கை.

No cleaning House after 6 P.M

நல்ல காரியமாக வெளியே செல்லும்போது ஒரு கருப்பு பூனை குறுக்கே போனால், போகும் காரியம் தடைபடும் என்று நம்பப்படுகிறது.

Black cat

கடைகளில், வாகனங்களில் கண் திருஷ்டியைப் போக்க எலுமிச்சை மற்றும் 7 பச்சை மிளகாய்களை கோர்த்துத் தொங்கவிடுவது வழக்கம்.

Lemon chilli

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நகம் வெட்டுவது அல்லது முடி கத்தரிப்பது தரித்திரத்தை உண்டாக்கும் என்பது பலரது நம்பிக்கை.

Nail cutting
Cat
வீட்டில் பூனை வளர்ப்பதின் 10 அருமையான நன்மைகள்!