Aadhi shankarar Quotes: ஆதி சங்கரரின் 12 பொன்மொழிகள்!

எஸ்.மாரிமுத்து

நம்மை ஆட்டிப் படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது என யோசியுங்கள்.

Aadhi shankarar | Imge Credit: Pinterest

மனதுடன் நடத்தும்  போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல. உறக்க நிலையில் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒரு போதும் நீங்குவதில்லை.

Aadhi shankarar | Imge Credit: Pinterest

அனைத்து சாஸ்திரங்களும், வேத நூல்களும் மனதை  அடக்கும் வழி முறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தீயை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.

Aadhi shankarar | Imge credit: pinterest

உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவுதான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்காது. இருந்தாலும் மனம் அந்த ஆசையை  விட்டு விட இடம் தருவதில்லை.

Aadhi shankarar | Imge Credit: Pinterest

காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய் தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாக கடித்து துன்பத்தை அடையும். அது போல மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.

Aadhi shankarar | Imge Credit: Pinterest

பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல் நீர் அருகில் சென்றதும் மறைவது போல மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.

Aadhi shankarar | Imge Credit: Pinterest

மூச்சு உள்ளவரை பக்தியுடன் வாழ வேண்டும் என்பதை கடவுளிடம்  வேண்டுங்கள்.

Aadhi shankarar | Imge Credit: Pinterest

தெரிந்தே தீமையை நாடுபவன் கண்ணிருந்தும் பார்வையை இழந்தவனே - நல்ல விஷயங்களை கேட்க விரும்பாதவன் காது இருந்தும் கேட்கும் திறனவற்றவேனே!

Aadhi shankarar | Imge credit: Pinterest

விளக்குக்கு மற்றொரு விளக்கின் ஒளி தேவை இல்லை. நீங்களும் பிறர் உதவியை எதிர்பார்க்க  வேண்டாம். கருமித் தனத்தால் நற்குணங்கள் அழியும்.

Aadhi shankarar

பலன்களை எதிர்பார்க்காது பணிபுரியுங்கள்.

Aadhi shankarar | Imge credit: Pinterest

தியானம் செய்யுங்கள்: சாந்தம் மிகுந்த கடவுளின் அம்சம் உங்களிடம் உள்ளது என்று தியானத்தின் மூலம் உணருங்கள்.

Aadhi shankarar
Benefits of Apple
ஆரோக்கியம் தரும் ஆப்பிள்!