பொற்கூரையில் ஒளிந்திருக்கும் சிதம்பர ரகசியம்!

பொ.பாலாஜிகணேஷ்

சித்சபையில் உள்ள 5 வெள்ளி படிகள் நமச்சிவாய என்ற ஐந்து எழுத்துக்களைக் குறிக்கும்.

பிரம்மன், மால், உருத்திரன்,மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளும் ஐந்து பீடங்கள்.

கனக சபையின் தங்கத் தூண்கள் 10. ஆறு ஆகமங்களாகவும், நான்கு வேதங்கள்.

வெள்ளித்தூண்கள் ஐந்தும் ஐம்பூதங்களாகவும் கருதி அமைக்கப்பட்டுள்ளது.

சபையில் உள்ள 96 துளைகள் 96 தத்துவங்களாகவும், 18 தூண்கள் 18 புராணங்களாகவும் கருதப்படுகிறது.

பொற்க்கூரையின் மீதுள்ள 64 கைமரங்கள் 64 கலைகளாகவும் கருதப்படுகின்றன.

சித்சபையில் வேயப்பட்டுள்ள பொற்கூறையில் 21,600 பொன் ஓடுகளும், அவை 72,000 ஆணிகளால் அறையப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மனிதன் நாள்தோறும் 21,600 முறை மூச்சு விடுவதாகவும், மனித உடலில் 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதாகவும் இவற்றை குறிக்கவே!