தமிழ்நாட்டின் தங்க கோவில்!

ஆர்.ஜெயலட்சுமி

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீபுரம் தங்க கோவில் வேலூர் நகரத்தில் மாலை கொடி என்னும் இடத்தில் மகாலட்சுமிக்காக எழுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கோவில் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு காட்சியளிக்கிறது. நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது.

1500 கிலோ தங்கம் பயன்படுத்தி 55,000 சதுர அடி பரப்பளவுக்கு தங்க கோவில் கட்டப்பட்டுள்ளது. தங்கக் கோவிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது.

மண்டபத்தின் பின்னால்  மனிதனின் பதினெட்டு வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18  நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ சக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் இந்த லட்சுமி நாராயண கோவில் உள்ளது. அந்த  நட்சத்திரத்தின் நடுவில் வட்ட வடிவில் கோவில் உள்ளது. மேலே இருந்து கோவிலை பார்த்தால் ஸ்ரீ சக்கரம் போன்றே தெரியும்.

இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பத்து அடுக்குக் கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு உள்ளது.

கோவிலைச் சுற்றிலும் புல்வெளியும் அதன் நடுவே சுவையான துர்க்கையும் லட்சுமியும் சரஸ்வதியும் மாரியம்மன் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.. செயற்கையான மலைகளும் குளங்களும் நீர்வீழ்ச்சிகளும் அழகாக உள்ளன

880 கேரட் எடை கொண்ட ஒரே கல்லாலான வைடூரியம் கொண்ட சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடம் 1700 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டு இந்த கோவிலில் உள்ள ஸ்ரீ சக்தி கணபதிக்கு சாற்றப் பட்டுள்ளது.

பொற்கூரையில் ஒளிந்திருக்கும் சிதம்பர ரகசியம்!