லட்சுமிக்கு செந்தாமரை, முருகனுக்கு? தெய்வங்களின் ஃபேவரைட் பூஜை மலர்கள்!

கிரி கணபதி

தெய்வங்களுக்குப் பிடித்தமான மலர்களைச் சாற்றி வழிபடுவது முழுமையான பலன்களைத் தரும். எந்தெந்த தெய்வத்திற்கு என்ன மலர்கள் உகந்தது என்பதை பார்க்கலாம் வாங்க.

Hindu god flowers | Gemini Image

1. விநாயகருக்கு விலையுயர்ந்த பூக்கள் தேவையில்லை. அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலை சாற்றுவது சிறந்தது.

Hindu god flowers | Gemini Image

2. சிவபெருமானுக்கு வில்வம் மிகவும் பிடிக்கும். தும்பை மற்றும் கொன்றை பூக்களும் சாற்றி வழிபடலாம்.

Hindu god flowers | Gemini Image

3. முருகனுக்குச் சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும். செவ்வரளி மற்றும் முல்லை பூக்களால் அர்ச்சனை செய்யலாம்.

Hindu god flowers | Gemini Image

4. விஷ்ணு பகவானுக்குத் துளசி இலைகள் விசேஷமானது. செந்தாமரை மலர்களை வைத்தும் சிறப்பாக வணங்கலாம்.

Hindu god flowers | Gemini Image

5. லட்சுமி தாயாருக்குச் செந்தாமரை மிகவும் உகந்தது. இதை வைத்து வழிபட்டால் பொருளாதாரக் கஷ்டங்கள் தீரும்.

Hindu god flowers | Gemini Image

6. சரஸ்வதி தேவிக்கு வெண்தாமரை மலர்கள் பிடிக்கும். வெண்ணிறப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்த பலனளிக்கும்.

Hindu god flowers | Gemini Image

7. பார்வதி தேவிக்கு நறுமண மலர்கள் பிடிக்கும். மல்லிகை மற்றும் முல்லை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

Hindu god flowers | Gemini Image

8. துர்க்கை அம்மனுக்குச் சிவப்பு செம்பருத்தி உகந்தது. அலரிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது விசேஷமானது.

Hindu god flowers | Gemini Image

9. மாரியம்மனுக்கு வேப்பம்பூ மாலை சாற்றுவது வழக்கம். எலுமிச்சை மாலை அணிவிப்பதும் மிகச் சிறப்பானதாகும்.

Hindu god flowers | Gemini Image

10. அனுமனுக்குச் சாமந்திப் பூக்கள் மிகவும் பிடிக்கும். துளசி மற்றும் வெற்றிலை மாலை சாற்றலாம்.

Hindu god flowers | Gemini Image

11. காலபைரவர் வழிபாட்டிற்குச் செவ்வரளி மலர்கள் சிறந்தது. நந்தியாவட்டை மலர்களைப் பயன்படுத்துவது நல்ல பலன்களைக் கொடுக்கும்.

Hindu god flowers | Gemini Image

12. சனி பகவானுக்கு நீல நிறம் பிடிக்கும். கருங்குவளைப் பூக்கள் சாற்றி வழிபட்டால் தோஷங்கள் விலகும்.

Hindu god flowers | Gemini Image

சரியான மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடுவது மனதிற்கு அமைதியைத் தரும். இனி முழுமையான பக்தியுடன் தெய்வங்களை வணங்குங்கள்.

Hindu god flowers | Gemini Image
Home Cleaning
ஃபேன், டியூப்லைட்டில் மறைவான தூசிகள்... இதை சுத்தம் செய்யலனா பெரும் ஆபத்து!