முத்து அணிவதால் உண்டாகும் 10 அதிசய நன்மைகள்!

நான்சி மலர்

1/11. முத்து (Pearl) சந்திர பகவானுக்குரிய ரத்தினமாகக் கருதப்படுகிறது. ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் முத்து அணிவதால் கிடைக்கும் 10 முக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

pearl

2/11. சந்திரன் மனதிற்கு காரகர் - மனோகாரகன். முத்து அணிவது அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி, ஆழ்ந்த அமைதியையும் தெளிவான சிந்தனையையும் தருகிறது.

pearl

3/11. அதிகப்படியான முன் கோபம் மற்றும் எரிச்சல் குணத்தைக் குறைப்பதில் முத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து நிதானத்தைக் கொடுக்கும்.

pearl

4/11. ஜோதிடத்தில் சந்திரன் தாயைக் குறிப்பவர். முத்து அணிவது தாயுடனான உறவை பலப்படுத்தும் மற்றும் தாயின் ஆசிர்வாதத்தைப் பெற்றுத் தரும்.

pearl

5/11. மன அழுத்தம் காரணமாகத் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் முத்து அணிந்தால், மனபயம் நீங்கி நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

pearl

6/11. முத்து உடலில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி, ஒருவிதமான தெய்வீகக்களை மற்றும் நேர்மறை அதிர்வுகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.

pearl

7/11. ஆன்மீக ரீதியாக, பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் மன உளைச்சலைச் சரிசெய்து, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும்.

pearl

8/11. மாணவர்கள் அல்லது தியானம் செய்பவர்கள் முத்து அணியும்போது, கவனம் சிதறாமல் ஒரு நிலைப்படும் தன்மை அதிகரிக்கும்.

pearl

9/11. முத்து ஒரு குளிர்ச்சியான ரத்தினம். இது உடலின் வெப்பத்தைக் குறைத்து, உடல் மற்றும் மனதிற்கு இதமான உணர்வைத் தரும்.

pearl

10/11. லக்ஷ்மி தேவியின் அம்சம் பொருந்தியதாக முத்து கருதப்படுகிறது. இதை அணிவது சுப காரியங்கள் தடையின்றி நடக்கவும், பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

pearl

11/11. பய உணர்வு, தேவையற்ற கற்பனைப் பயம் மற்றும் கண் திருஷ்டி போன்றவற்றிலிருந்து முத்து ஒரு கவசமாகச் செயல்பட்டு மன உறுதியைத் தரும்.

pearl
Nita Ambani
ஏன் பணக்காரர்கள் எப்போதும் வைரம் அணிகிறார்கள்