இந்த 10 ஊர்களுக்குப் போனா, இதை வாங்காம மட்டும் வராதீங்க!

கிரி கணபதி

இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் நீங்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய உணவுப் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Foods

1. ஆக்ரா - பேடா (Agra Petha): ஆக்ரா சென்றால் தாஜ்மஹாலை பார்ப்பதோடு, மறக்காமல் புகழ்பெற்ற 'பேடா' வாங்குங்கள். வெள்ளை பூசணிக்காயில் செய்யப்படும் இந்த இனிப்பு பல வகைகளில், நாவில் நீர் ஊறவைக்கும் சுவைகளில் கிடைக்கிறது.

Agra Petha

2. மைசூர் - மைசூர் பாக் (Mysore Pak): கர்நாடகாவின் பாரம்பரிய சுவையான மைசூர் பாக்கை, அதன் சொந்த ஊரான மைசூரிலேயே வாங்குவது தனி சுகம் தான். நெய்யில் ஊறிய, நாவில் வைத்ததும் கரையும் இந்த ஒரிஜினல் சுவை வேறு எங்கும் உங்களுக்கு கிடைக்காது.

Mysore Pak

3. புனே - பாகர்வாடி (Pune Bhakarwadi): புனே பக்கம் போனால் அங்கே கிடைக்கும் மொறுமொறுப்பான 'பாகர்வாடி' ஸ்நாக்ஸை மிஸ் பண்ணாதீங்க. இனிப்பு, காரம், புளிப்பு என எல்லா சுவையும் ததும்பும் இந்த சிற்றுண்டி, உங்களின் தேநீர் நேரத்தை அழகாக்கும்.

Pune Bhakarwadi

4. ஜெய்ப்பூர் - கேவர் (Jaipur Ghewar): ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் 'கேவர்' என்ற இனிப்பு மிகவும் பிரபலம். வட்ட வடிவில், நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்படும் இந்த இனிப்பு உங்கள் நாவில் தேனை வார்க்கும்.

Jaipur Ghewar

5. ஹைதராபாத் - உலர் பழங்கள் & பிஸ்கட் (Dry Fruits & Biscuits): ஹைதராபாத் என்றாலே பிரியாணி தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், அங்கு கிடைக்கும் தரமான நட்ஸ் வகைகளையும், இரானி சாயுடன் சாப்பிடப்படும் 'ஓஸ்மானியா' பிஸ்கட்டையும் வாங்கி ருசித்துப் பாருங்கள், அடிமையாகி விடுவீர்கள்.

Dry Fruits & Biscuits

6. கோவா - பெபின்கா (Goa Bebinca): கோவா ட்ரிப் போறீங்களா? அப்போ தேங்காய் பால், முட்டை, நெய் சேர்த்து அடுக்கடுக்காக செய்யப்படும் பாரம்பரிய 'பெபின்கா' கேக்கை கட்டாயம் வாங்கிச் சாப்பிடுங்கள். இதனுடைய சுவை வேற லெவலில் இருக்கும்.

Goa Bebinca | Condé Nast Traveller

7. டார்ஜிலிங் - தேயிலை (Darjeeling Tea): டார்ஜிலிங் மலைப்பகுதியின் இதமான குளிருக்கு இதமாக ஒரு கப் ஒரிஜினல் டார்ஜிலிங் டீ குடிப்பது அலாதியான உணர்வு. அங்கிருந்து திரும்பி வரும்போது உங்கள் நண்பர்களுக்காக தரமான தேயிலையை வாங்கி வர மறக்காதீர்கள்.

Darjeeling Tea

8. அமிர்தசரஸ் - பாப்பட் & வடி (Amritsar Papad & Wadi): பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோயிலை தரிசித்துவிட்டு, அப்படியே அங்கு கிடைக்கும் மொறுமொறுப்பான பாப்பட் மற்றும் வடியை வாங்கி வாருங்கள். இது உங்கள் அன்றாட சமையலுக்கு சூப்பராக உதவும்.

Amritsar Papad & Wadi

9. ஸ்ரீநகர் - குங்குமப்பூ & கஹ்வா (Srinagar Saffron & Kahwa): காஷ்மீர் பள்ளத்தாக்கின் செழுமையைக் குறிக்கும் ஒரிஜினல் குங்குமப்பூவை ஸ்ரீநகரில் வாங்கலாம். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், அதன் தரமும் மணமும் ஸ்பெஷலாக இருக்கும்; கூடவே 'கஹ்வா' டீத்தூளையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

Srinagar Saffron & Kahwa

10. சென்னை - ஃபில்டர் காபி & பொடி (Chennai Filter Coffee & Podi): நம்ம ஊரு மெட்ராஸ் ஃபில்டர் காபியின் மணமே தனி தான். சென்னையிலிருந்து உங்கள் நண்பர்களுக்குப் பரிசளிக்க தரமான காபி தூளையும், சுடச்சுட இட்லிக்குத் தொட்டுக்கொள்ள காரசாரமான இட்லி மிளகாய்ப் பொடியையும் வாங்கிச் செல்லுங்கள்.

Chennai Filter Coffee

அடுத்த முறை இந்த நகரங்களுக்குச் செல்லும்போது, வெறும் புகைப்படங்களை மட்டும் எடுக்காமல், இந்த சுவையான நினைவுகளையும் சேர்த்து அள்ளி வாருங்கள்.

Travel
2026-SIP-Tips
2026 பங்குச்சந்தையில் லாபம் அள்ள 10 SIP டிப்ஸ்! Start Now!