கோடீஸ்வரர்கள் கூட ஏங்கும் அந்த 10 அனுபவங்கள் இதோ!

நான்சி மலர்

1/11. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அரிய தருணங்களை அனுபவிப்பது நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும். அத்தகைய 10 சிறப்பான செயல்பாடுகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Sky diving

2/11. வாழ்க்கையில் ஒருமுறையாவது யாருடைய துணையும் இன்றி தனியாக ஒரு நீண்ட பயணம் செல்ல வேண்டும். இது உங்களைப் பற்றி நீங்களே புரிந்து கொள்ளவும், புதிய மனிதர்களைச் சந்திக்கவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும்.

solo travel

3/11. தாய்மொழி மற்றும் ஆங்கிலம் தவிர்த்து, முற்றிலும் வேறொரு கலாச்சாரத்தைச் சார்ந்த ஒரு மொழியைக் கற்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் மூளைத்திறனை அதிகரிப்பதோடு, புதிய உலகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தும்.

learning

4/11. உயரத்தில் இருந்து குதிக்கும் Bungee Jumping அல்லது வானத்தில் பறக்கும் Sky Diving போன்ற ஒரு சாகசத்தை முயற்சி செய்யுங்கள். மரண பயத்தைத் தாண்டி நீங்கள் உணரும் அந்த நிமிடம் வாழ்நாள் முழுவதும் உங்கள் நினைவில் நிற்கும்.

Bungee Jumping

5/11. ஒரு சிறிய விதையை நட்டு, அது துளிர்விட்டு வளர்ந்து பெரிய மரமாவதை அருகில் இருந்து கவனியுங்கள். இயற்கையோடு உங்களுக்கு இருக்கும் பிணைப்பை உணர இது ஒரு சிறந்த வழி.

small plants

6/11. ஓவியம், இசை, சமையல் அல்லது ஏதேனும் ஒரு கைவினைப் பொருளை நீங்களே உருவாக்கிப் பாருங்கள். படைப்புத் திறன் தரும் மகிழ்ச்சி பணத்தால் வாங்க முடியாதது.

drawing

7/11. எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஒரு மாதம் அல்லது ஒரு வாரம் ஏதேனும் ஒரு சமூக சேவை செய்யுங்கள். அடுத்தவர் முகத்தில் நீங்கள் வரவழைக்கும் புன்னகை உங்கள் மனதிற்குப் பேரமைதியைத் தரும்.

social service

8/11. ஸ்மார்ட்போன், லேப்டாப் என எந்தத் தொழில்நுட்பமும் இல்லாமல் ஒரு வாரம் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் தங்குங்கள். அந்த அமைதி உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ள உதவும்.

phone usage

9/11. தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு அல்லது கும்பகோணம் மகாமகம் போன்ற உலகின் ஏதேனும் ஒரு மிகப்பெரிய கலாச்சாரத் திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே உணர்வோடு கூடும் அந்தத் தருணம் மிகவும் சக்தி வாய்த்தது.

kumbakonam

10/11. உங்களுக்கு எதைக் கண்டால் பயமோ - உயரம், தண்ணீர் அல்லது மேடைப் பேச்சு அதை ஒருமுறை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். அந்தத் தடைகளைத் தகர்க்கும் போது உங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம் அளப்பரியது.

speech

11/11. குறைந்தது மூன்று நாட்கள் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்து பாருங்கள். உங்கள் எண்ணங்களை உற்று கவனிக்கவும், உள்மன அமைதியைக் கண்டறியவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு.

lonely
Melon
இதை தெரிஞ்சுக்காம முலாம்பழம் வாங்காதீங்க! ஜூசியான பழத்தை கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்!