கடற்கரையும் மலைகளும் சேர்ந்து அமைந்த 8 அழகிய சுற்றுலாத் தலங்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடற்கரையை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலைகளும் ஒருங்கே அமைய பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் சிலவற்றை காணலாம்.

mountain beaches in india

ஆந்திர பிரதேசம் யாரடா:

விசாகப்பட்டினத்தில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது. கடற்கரையின் மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்ட மிக ரம்யமான இடம். கடற்கரையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் டால்பினின் மூக்கை போன்ற குன்று ஒன்றையும் தவறாமல் கண்டு களியுங்கள்.

yarada, Andhra Pradesh

கோகர்ணா கர்நாடகா:

குன்று ஒன்றின் மீது ஏறி பார்க்க ஒரு முனையில் அரபிக் கடலின் அழகையும்,மறுமுனையில் கோகர்ணா நகரத்தையும் கண்டுகளிக்கலாம். இவ்விடத்தில் அழகிய பீச்சுகளான ஹாஃப் மூன் பீச், ஓம் பீச், குட்லே பீச்கள் உள்ளன.

Gokarna, Karnataka

கணபதி புலே, மகாராஷ்டிரா:

இது கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தை பார்க்க தவறவிடாதீர்கள்.

Ganpatipule, Maharashtra

வர்க்கலா கேரளா: 

திருவனந்தபுரத்திலிருந்து 51 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு ஆயுர்வேத புத்துணர்ச்சி மையங்கள் உள்ளன. படகு சவாரி, சூரிய குளியல் என அனுபவிக்க ஏற்ற இடம்.

Varkala, Kerala

மங்களூர் பனம்பூர் கடற்கரை:

மிகவும் தூய்மையான கடற்கரை இது. குதிரை மற்றும் ஒட்டக சவாரியை இங்கு அனுபவிக்கலாம். பாராசைலிங், ஜெட் ஸ்கை,ஏடிவி ரைடுகள் என சாகசங்கள் செய்ய ஏற்ற இடம்.

Panambur Beach, Mangalore

வாகேட்டர் கடற்கரை, கோவா:   

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கோ‌வாவின்  வடக்கு பகுதியில் அமைந்துள்ள இடம் இது. மென்மையான வெள்ளை மணல், தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ள அழகான கடற்கரை.

vagator beach, goa

கனகோனா, கோவா:

இங்கு கடற்கரை பசுமையான மலைகளால் சூழப்பட்டு காணப்படும். கடலை சுற்றி அமைந்த பகுதியில் பனை மரங்களும், மலைகளும், அருவிகளும் நம் கண்ணையும் கருத்தையும் சுண்டி இழுக்கும்.

Canacona, Goa

யானை கடற்கரை(Elephant Beach), அந்தமான்:

(Coral reefs) கோரல் ரீப்ஸ் நிறைந்த கடலும், அழகான வெள்ளை மணல் கொண்ட கடற்கரையும், மலைகளும் சூழ்ந்த இந்த கடற்கரையில் சாகச விளையாட்டுக்கள் பல உண்டு!

Elephant Beach, Andaman
சென்னையை சுற்றிப்பார்க்க போறீங்களா? இந்த 10 இடங்களை பாருங்க முதல்ல!