கே.எஸ்.கிருஷ்ணவேனி
Thoothukudi
1. தேரிக்காடு: தமிழ்நாட்டின் ஒரே மணல் மேடு பாலைவனம் இதுவாகும்; இதிலுள்ள ஹெமடைட் தாதுக்களால் மண் அடர் சிவப்பு நிறத்தில் ஒளிர்கிறது.
2. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை: சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையும், அவரது குலதெய்வமான ஜக்கம்மாள் கோவிலும் இங்கு அமைந்துள்ளது.
3. எட்டையபுரம்: புரட்சிக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊரான இங்கு, அவரது இல்லமும் மற்றும் உமறுப் புலவர் வாழ்ந்த இடமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
4. கழுகுமலை குடைவரை கோவில்கள்: பாண்டியர் கால வெட்டுவான் கோவில் மற்றும் சமணர் சரணாலயப் பகுதிகள் 'தென்னிந்தியாவின் எல்லோரா' என்று அழைக்கப்படுகின்றன.
5. திருச்செந்தூர் முருகன் கோவில்: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரே கோவிலும் ஆகும்; இதன் ராஜகோபுரம் 157 அடி உயரமுடையது.
6. அய்யனார் சுனை: திருச்செந்தூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இங்கு, ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் சுரக்கும் இயற்கையான நீரூற்று உள்ளது.
7. வல்லநாடு வெளிமான் சரணாலயம்: இந்தியாவின் தென்கோடியில் இயற்கையாக வெளிமான்கள் (Blackbuck) வாழும் ஒரே பகுதியாகும்.
8. முயல் தீவு: தூத்துக்குடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள மன்னார் வளைகுடாவின் மிகப்பெரிய தீடாகும்; இது மனிதர்கள் வாழாத தீவு மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
9. மணப்பாடு கடற்கரை: தங்க நிற மணற்பரப்பும் தெளிவான நீரும் கொண்ட இங்கு, வரலாற்று சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற திருச்சிலுவை ஆலயம் அமைந்துள்ளது.
10. பனிமயமாதா ஆலயம்: தூத்துக்குடியின் அடையாளமாகத் திகழும் போர்த்துகீசியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாலயம், வாடிகன் சிட்டியால் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது.