2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள்!

ராஜமருதவேல்

1/15 - தற்போது தமிழக முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த முறையும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். 

M.K.Stalin | credit India.Com

2/15 - விஜய் செல்லும் இடமெல்லாம் பெரும் கூட்டம். போக்குவரத்து நெரிசல், இட நெருக்கடி போன்றவை நடைபெறுவதால், தற்போது விஜய் வீடியோ மூலம் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல். இவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். 

Actor vijay | credit Britannica

3/15 - இதே தொகுதியில் வெற்றி தோல்வி இரண்டையும் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் தனது எடப்பாடி தொகுதியை விட்டு, வேறு தொகுதிக்கு மாறியது இல்லை.

Edappadi Palanisamy | credit x.com

4/15 - சீமான் பரபரப்பான பேச்சாளர். சீமானின் பேச்சுகளுக்கு எப்போதும் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. இந்த முறை சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். 

Seeman | credit wikipedia

5/15 - தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். இந்த முறையும் அவர் போடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார்.

O. Paneer Selvam | credit The Hindu

6/15 - புகழ்பெற்ற இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி , இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார். முதல்முறையாக களம் இறங்கும் இவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.

sundar c | credit wikimedia commons

7/15 - தமிழகத்தின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின், கடந்த சட்டமன்ற தேர்தலைப் போலவே இந்த முறையும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

udhayanidhi stalin | Credit Rediff

8/15 - நகைச்சுவை நடிகரான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவராக இருக்கிறார். இதற்கு முன்னர் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், இந்த முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். 

Karunas | credit Cinema Vikatan

9/15 - தமிழ் சினிமாவின் வில்லன் நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் பிரபலமானவர் மன்சூர் அலிகான். தனது கட்சியின் சார்பில் இவர் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

mansoor ali khan | credit flimy focus

10/15 - சௌமியா அன்புமணி பாமக தலைவர் அன்புமணியின் மனைவி ஆவார்.  பாமகவின் பெண் முகமாக கருதப்படும் இவர் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுக்கிறார்.

sowmya anbumani | credit Vikatan

11/15 - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன், சிதம்பரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர். இந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்குடி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்குகிறார்.

Thirumavalavan | credit The times of india

12/15 - தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் , ஒரு சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர் ஸ்ரீநாத். தவெக கட்சி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

Actor srinath | credit filmibeat Tamil

13/15 - தமிழக பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த சட்டமன்றத் தேர்தலில் தனது தொகுதியை விட்டு , சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார

nainar nagendran | credit The News minute

14/15 - தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழக அரசியலில் மிகவும் பிரபலமானவர். இரண்டு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றிய அவர் இந்த முறை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

tamil isai soundharrajan | credit ET Gpverment

15/15 - 2026 நடைப்பெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விருத்தாசலத்தில் போட்டியிடுகிறார்.

Premalatha | credit x.com
Fish Feeding
மீன்களுக்கு அதிக உணவு கொடுப்பது ஏன் ஆபத்தானது?