ஆர்.ஐஸ்வர்யா
ஆண்களுக்கான 9 வகையான சிறந்த ஜீன்ஸ் ஃபிட் வகைகள்:
பல ஆண்டுகாலமாக, ஜீன்ஸ் ஆண்களின் விருப்ப உடையாக இருக்கிறது. ஆண்களுக்கான பல்வேறு ஜீன்ஸ் ஃபிட் வகைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
லூஸ் ஃபிட் ஜீன்ஸ்:
இந்த ஜீன்ஸ் ஒரு பேகி பேண்ட்டை போல தளர்வான உடையாகும். தொடைப்பகுதியில் மிகவும் இறுக்கமாக இல்லாமல் லூசாக இருக்கும். பருமனான தோற்றம் கொண்டவர்களுக்கும் அணிய மிகவும் வசதியாக இருக்கும். நீண்டநேரத்திற்கு அணிய ஏற்றது. கசகசவென்று வியர்க்காமல் இருக்கும்.
ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ்:
ஒல்லியாக இருப்பவர்கள் பொதுவாக ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸை விரும்புகிறார்கள். இது அணிவதற்கு வசதியாகவும் மற்றும் பார்ப்பதற்கு உடலோடு ஒட்டி ஸ்டைல் ஆகவும் இருக்கும். கால் பகுதியில் குறுகிய திறப்பைக் கொண்டுள்ளது.
ரெகுலர் ஃபிட் ஜீன்ஸ்:
ரெகுலர் ஃபிட் ஜீன்ஸ் கால் பகுதியில் இறுக்கமாக இல்லாமல் அணிய சவுகர்யமாக இருக்கும். மிகவும் ஒல்லியாகவோ, பருமனாகவோ இல்லாமல், நடுத்தர பருமனாக உள்ள ஆண்கள் இந்த வகை ஜீன்ஸை விரும்புகிறார்கள்.
ஸ்கின்னி ஃபிட் ஜீன்ஸ்:
ஸ்கின்னி ஜீன்ஸ் தடிமனான ஆண்களுக்குப் பொருந்தாது. இது இடுப்பு முதல் கணுக்கால் வரை உடலோடு ஒட்டி இறுக்கமாக இருக்கும். அகலமான லெக் ஓப்பனிங் கொண்ட ஸ்கின்னி ஃபிட் கம்பீரமான தோற்றத்தைத் தந்தாலும், அணிவதற்கு அவ்வளவு வசதியாக இருக்காது. எல்லா சந்தர்ப்பத்திலும் அணிய ஏற்றதல்ல. சிறிது நேரம் அணியலாம்.
டேப்பர்டு ஃபிட் ஜீன்ஸ்:
டேப்பர்-ஃபிட் ஜீன்ஸ் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. தொடைப் பகுதியில் லூசாகவும், (அகலமானது) முழங்கால், மற்றும் கணுக்கால், பாதம் போன்ற இடங்களில் குறுகியும் இருக்கும். பெரிய இடுப்பு மற்றும் தொடைகள் கொண்ட ஆண்களுக்கு ஏற்றது.
குறுகிய ஃபிட் ஜீன்ஸ்:
இந்த வகை ஜீன்ஸ்களில் முழங்காலுக்கு கீழ் ஆரம்பித்து பாதம் வரை மட்டும் டைட்டான அமைப்பை கொண்டிருக்கும். முழங்காலுக்கு மேற்பட்ட பகுதியில் சாதாரணமாக இருக்கும்
ரிலாக்ஸ்டு ஃபிட் ஜீன்ஸ்:
இந்த வகை ஆடைகள் பருமனான உடல்வாகும், தடிமனான தொடைகள் கொண்ட ஆண்களுக்கும் வசதியாக இருக்கும். இதை அணிந்து கொண்டு கீழே தரையில் அமர்வது கூட வசதியாக இருக்கும். மேலும் நீண்ட நேரம் அணிவதற்கு ஏற்றது. வியர்வையினால் உண்டாகும் கசகசப்பு இதில் இருக்காது.
லோ ரைஸ் ஜீன்ஸ்:
இது தொப்புளிலிருந்து மூன்று இன்ச் கீழே தள்ளி, இடுப்புக்கு கீழே அணியப்பட வேண்டிய ஜீன்ஸ் வகை. மிகவும் ஒல்லியாக இருக்கும் ஆண்களால் விரும்பப்படுவது. இப்போது கல்லூரி மாணவர்கள் மத்தியில் ட்ரெண்டில் உள்ளது
மிட் ரைஸ் ஜீன்ஸ்:
லோ ரைஸ் ஜீன்ஸ் போல இல்லாமல் இந்த வகை ஜீன்ஸ் இடுப்பில் பொருந்துமாறு இருக்கிறது. இது மிக உயரமாகவும் இல்லாமல் குட்டையாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்கிறது.
பெண்கள் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு ஜீன்ஸ் வாங்க சில குறிப்புகள்:
ஆண்களைப் போலவே பெண்களும் குறிப்பாக இளம் பெண்கள் ஜீன்ஸ் அணிய ஆசைப்படுவார்கள். ஆனால் நிறைய பேருக்கு தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு ஜீன்ஸை தேர்வு செய்து வாங்க தெரிவதில்லை இந்தப் பதிவு அவர்களுக்கு உதவியாக இருக்கும்
ஹைரைஸ் ஜீன்ஸ்:
சற்றே உடல் பருமனான இடுப்பு அகலமாக இருக்கும் பெண்களுக்கு ஹைரைஸ் ஜீன்ஸ் ஏற்றதாக இருக்கும் ஆனால் கால் பகுதியில் ஒல்லியாக இருக்குமாறு உள்ள ஜீன்ஸை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். இல்லை என்றால் உருவத்தை இன்னும் பெரிதாகக் காட்டும்.
மிட் ரைஸ் ஜீன்ஸ்:
சில பெண்களுக்கு கால், தொடை பகுதியை விட வயிறு மற்றும் முதுகுப்புறம் அகலமாக இருக்கும். இவர்களுக்கு மிட் ரைஸ் ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். இந்த ஜீன்ஸின் கால் பகுதி அகலமாகவும் பூட் கட்டுடனும் பார்ப்பதற்கு ஸ்டைலிஷ்ஷாக இருக்கும்.
மிட் அல்லது ஹை ரைஸ்:
சற்றே உடல் பருமனான பெண்களுக்கு, மிட் அல்லது ஹை ரைஸ் ஜீன்ஸ்கள் ஏற்றவை. அவை கருப்பு அல்லது நேவி ப்ளூ நிறத்தில் இருந்தால், உடல் அமைப்பை பிட்டாக காட்டும். மேலே அணியும் ஆடை கிராப்டாப் வகையில் இருந்தால் மிகப் பொருத்தமாக இருக்கும்.
லோ அல்லது மிட் ரைஸ் ஜீன்ஸ் உயரமான ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்களுக்கு ஏற்றது.
உயரம் குறைவாக சிறிய உருவமாக இருக்கும் பெண்களுக்கு ஹை ரைஸ் ஜீன்ஸ் ஏற்றவை. இவர்கள் த்ரீ ஃபோர்த் டைப்பான ஜீன்ஸ்களை அணியலாம். ஹை ஹீல்ஸ் போட்டு ஸ்டைலாக காண்பிக்கலாம்.