கல்கண்டு சாதம்!

ஆதிரை வேணுகோபால்

தேவையான பொருட்கள்: பச்சரிசி 1 கப், பால் 1 லிட்டர், கல்கண்டு 2 கப், நெய் ½ கப், முந்திரி திராட்சை தலா 15, எலத்தூள் ½ டீஸ்பூன், குங்குமப்பூ 1 சிட்டிகை (ஒரு கரண்டி பாலில் ஊற வைக்கவும்).

அரிசியுடன் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் குழைய வேகவிடவும்.

வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து கல்கண்டை பொடித்து சாதத்துடன் சேர்த்துக் கிளறவும். கல்கண்டு கரைந்து, சாதத்தோடு ‌நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.

நெய்யில் பாதியளவைக் காயவைத்து முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும்.

மீதமுள்ள நெய், ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப்பூ ‌அனைத்தையும் கல்கண்டு சாதக் கலவையோடு சேர்த்து கிளறி இறக்கவும்.

எள் சாதம்!

தேவையான பொருட்கள்: பச்சரிசி 1 கப், கடுகு ¼ டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய், நெய் தலா 1 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

வறுத்து பொடிக்க: கருப்பு எள் ¼ கப், தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்.

அரிசியை உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்து வைத்துக்கொள்ளவும்.

வறுத்து பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் தனித்தனியாக மொறு மொறுப்பாக வறுத்து மிக்ஸியில் பொடித்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய், நெய்யை ஒன்றாக சேர்த்து காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து, சாதத்தில் கொட்டவும்.

அதனுடன் வறுத்து அரைத்த பொடியைத் தூவி மெதுவாகக் கலந்து இறக்கவும்.

பிரபல எழுத்தாளர்கள் - விசித்திர பழக்கங்கள்!