இந்தியாவின் அதிகம் அறியப்படாத அழகிய 9 தீவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

இன்பச் சுற்றுலா என்றால்  நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல், மைசூர், ஆக்ரா போன்ற இடங்களே. இவற்றைத் தவிர்த்து, கொஞ்சம் அதிக பட்ஜெட்டில் ஒரு முறையேனும் கண்டு களித்து வரவேண்டிய பல அழகிய தீவுகள் இந்தியாவில் உள்ளன. தெரிந்து கொள்வோமே...

மஜுலி தீவு, அஸ்ஸாம்:

பிரம்மபுத்ரா நதியில் அமைந்துள்ளது இத்தீவு. நதிகளுக்குகிடையில் அமைந்த தீவுகளில், உலகிலேயே மிகப் பெரியது. இதன் பழமையின் வசீகரம் மற்றும் பழங்குடியினரின் பாட்டு, நடனம், விழாக்கள் ஆகியவை கண்டும் கேட்டும் ரசிக்கத்தக்கவை.

டையூ தீவு:

அமைதியான கடற்கரையும் போர்ச்சுக்கீசிய பாரம்பரியமும்  கொண்டது. இங்குள்ள கோட்டைகளும், இந்திய - ஐரோப்பிய கலாச்சாரம் இரண்டும் கலந்த பழக்கவழக்கங்களும் வியக்க வைக்கும்.

நேத்ராணி தீவு - கர்நாடகா:

இங்குள்ள கடல்  நீர் தெள்ளத் தெளிவானது. பவளப்பாறைகளை உள்ளடக்கியது. மூழ்கி விளையாடவும் சாகசம் புரியவும் தூண்டும். கடலோரம் வாழும் மக்களின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரிய வாழ்கை முறை பாராட்டத் தோன்றும்

செயின்ட் மேரிஸ் ஐலேண்ட் - கர்நாடகா:

தனித்துவமான அறு கோண கருங்கல் பாறைகள் நிறைந்தது. இது புவியியல் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. இதன் அழகும் அமைதியான பீச்சும் அனுபவிக்க வேண்டியவை.

எலிபெண்டா தீவு - மகாராஷ்டிரா:

மும்பை நகரிலிருந்து படகில் சென்று வரும் தூரம்தான். அங்குள்ள பழமை வாய்ந்த பாறைகள், அவற்றில் கட்டப்பட்டுள்ள சிவன் கோவில், வரலாற்று சித்திரங்கள் அதிசயமானவை.

லிட்டில் அந்தமான்:

நீர் சறுக்கு விளையாட உகந்த அலைகள் கொண்ட கடல், வியக்கத்தக்க நீர்வீழ்ச்சிகள், பழங்குடி இனத்தவர்களின் ஆளுமை கொண்ட தீவு.

ராஸ் தீவு - அந்தமான் நிக்கோபர்:

பிரிட்டிஷார் ஆட்சியில் தலை நகரமாய் இருந்தது. இப்போது மயில்கள் நிறைந்த பசுமையான காடுகளுக்கு நடுவே அழிவுச் சின்னமாக காட்சி தரும் இதன்  பிரமாண்ட கட்டிடங்கள் வியப்பின் உச்சம்.

மினிக்கோய் - லட்சத்தீவு:

லட்சத் தீவுகளில் இரண்டாவது பெரியது.  கலாச்சாரப் பாரம்பரியம் கொண்டது. ஆங்காங்கே உள்ள லகூன்கள் அழகு நிறைந்தவை. நீர் விளையாட்டுக்கள் பிரசித்தம்.

கல்பேணி - லட்சத் தீவு:

அமைதியான பீச், பவளப் பாறைகள், லகூன்கள், கொண்டது. கயாக் ராஃப்டிங் செய்வதற்கேற்ற தூய கடல் நீர். பீச்சின் கரையிலுள்ள தங்குமிடங்களில் தங்கி, பழங்குடியினரின் உபசரிப்பில் திளைப்பது அலாதி இன்பம்.

அந்தமான் நிக்கோபர் தீவுகளை சுற்றி நீல் தீவு போன்று பலப்பல அழகிய தீவுகள் உள்ளன. ஒவ்வொன்றும் கலாச்சாரம், சாகசம், வனம், வளம், வரலாறு என எதாவதொரு பாரம்பரியத்தைத் தாங்கி, தலை நிமிர்ந்து நிற்கின்றன.

யானைகளின் தும்பிக்கையில் எத்தனை தசைகள் தெரியுமா?