தங்கத்தாரகை ஜெயலலிதா பிறந்தநாள் ஸ்பெஷல்!

எஸ்.மாரிமுத்து

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்கர்களுடன்  சேர்ந்து நடித்துள்ளார்.

Jayalalithaa | Imge Credit: Pinterest

சினிமா, அரசியல், சமூகம் உள்ளிட்ட பல துறைகளிலும் முத்திரை பதித்து பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

Jayalalithaa | Imge Credit: Pinterest

1972-ல் பட்டிக்காடா பட்டணமா என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம் பேர் விருதினை வாங்கி கொடுத்தது. சிறந்த தெலுங்கு நடிகை ஃபிலிம் பேர் விருதினை ஸ்ரீ கிருஷ்ணா சத்யா என்ற படத்துக்காக அவருக்கு வழங்கப்பட்டது.

Jayalalithaa | Imge Credit: Pinterest

1972 -ல் தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

Jayalalithaa | Imge Credit: Pinterest

1991-ல் சென்னை பல்கலைக்கழகம் மூலமாக 1991-ம் ஆண்டு இலக்கியத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

Jayalalithaa | Imge Credit: Pinterest

1992 இல் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவியலுக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

Jayalalithaa | Imge Credit: Pinterest

1993-ல் சூரியகாந்தி படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம் பேர் விருதினை வழங்கியது.

Jayalalithaa | Imge Credit: Pinterest

1993-இல் கடிதங்களுக்கான டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் என்ற கவுரவ டாக்டர் பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கியது.

Jayalalithaa | Imge Credit: Pinterest

2003-ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

Jayalalithaa | Imge Credit: Pinterest

2004-ல் ஆசிய சபை விருதான பத்தாண்டின் சிறந்த அரசியல் பெண்மணி என்ற பட்டத்தை பெற்றுக் கொள்ளுமாறு பிரிட்டிஷ் அரசு அழைப்பு விடுத்தது. ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் லண்டன் இவருக்கு வழங்கி கவுரவித்தது.

Jayalalithaa | Imge Credit: Pinterest

2004-ல் இந்தியாவிலும் தமிழகத்திலும் பாலின சமத்துவம் மற்றும் சமுதாயத்தில் நலிந்த பிரிவினரை பாதுகாத்தல் ஆகியவற்றில் சேவை புரிந்தமைக்காக தங்கத் தாரகை விருது சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு குழுவினால் வழங்கப்பட்டது.

Jayalalithaa | Imge Credit: Pinterest

2011-ல் இவருடைய மிகச்சிறந்த சேவை மற்றும் ஆழும் திறமையை பாராட்டி அமெரிக்க நாட்டில் உள்ள நியூ ஜெர்சி பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

Jayalalithaa | Imge Credit: Pinterest

ஜெயலலிதா, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பேசுவதில் வல்லவர் உடன் மலையாள மொழியையும் நன்கு புரிந்து கொள்ளும் திறமை உடையவர்.

Jayalalithaa | Imge Credit: Pinterest

மேலும் ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் இவர் எழுதிய பல கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. தமிழில் நான்கு முழு நீள நாவல்களும் பல சிறு கதைகளும் எழுதியுள்ளார். சிறந்த எழுத்தாளர்.

Jayalalithaa | Imge Credit: Pinterest

இவரது பொழுது போக்குகள் படித்தல், இசை ஆகும். பிடித்த விளையாட்டு கிரிக்கெட், டென்னிஸ், நீந்துதல், குதிரை ஏற்றம், கூடைப்பந்து, சதுரங்கம், உடற்பயிற்சி விளையாட்டுகள்.

Jayalalithaa | Imge Credit: Pinterest

கின்னஸ் புத்தகத்திலும் ஜெ பெயர் இடம் பெற்றுள்ளது. 

Jayalalithaa | Imge Credit: Pinterest
Lemon juice
எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா...?