சுருக்குப்பை செய்திகள் (01.04.2024)

கல்கி டெஸ்க்

உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. மீரடில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.

PM Modi | Image Credit: infra

கிரிக்கெட்டில் உள்ளதை போல் மக்களவை தேர்தலில் 'மேட்ச் ஃபிக்சிங்' செய்ய பிரதமர் முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு. வாக்கு எந்திரத்தை 'ஃபிக்சிங்' செய்யாமல் பாஜகவால் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்றும் இந்திய கூட்டணியின் கூட்டத்தில் கருத்து.

Rahul Gandhi

மக்களவை தேர்தல் பயம் காரணமாகவே தான் சிலிண்டர் விலையை பிரதமர் மோடி குறைத்து இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. சிலிண்டர் விலையை உயர்த்தியது யார் என்றும் கேள்வி.

MK Stalin

மக்களவை தேர்தலோடு அதிமுக காணாமல் போய்விடும் என்ற பாஜகவின் இராம சீனிவாசன் பேச்சுக்கு இ.பி.எஸ் கடும் கண்டனம். தேர்தலுக்கு பின் யார் காணாமல் போவார்கள் என்பது தெரிய வரும் என கருத்து.

Eps Ops

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவரான சதானந்த் வசந்த் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனராக பொறுப்பேற்பு.

Sadanand Vasant

தமிழ்நாட்டில் பரனூர் உள்ளிட்ட 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Toll Palaza

நாடு முழுவதும் அடுத்த நிதியாண்டுக்கான மாற்றங்கள் மற்றும் புதிய விதிகள் இன்று முதல் அமல். வருமான வரி, சுங்கச்சாவடி உள்ளிட்ட துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ள விதிகள் நடைமுறைக்கு வருகிறது.

Toll Palaza, Imcome Tax Dept, Central Govt

சுங்கக்கட்டண உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவிசய பொருள்கள் விலை உயரும் அபாயம். பொது மக்கள் வேதனை.

Vegatables Price Hike

நாடுமுழுவதும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் விலை இன்று முதல் உயர்வு - தேசிய மருந்து நிர்ணய ஆணையம் அறிவிப்பு.

Antibiotics medicine

தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 நாட்களுக்கு வெப்ப நிலை படிப்படியாக அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

temperature increase,Meteorological Department

ஸ்பெயினில் கடற்கரைகளில் உள்ள மணல், கற்களை எடுத்து சென்றால் 2 லட்சம் ரூபாய் அபராதம். கடந்த ஓராண்டில் டன் கணக்கில் மணல், கற்கள் மாயமானதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை.

Spain beach

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் சின்னர் சாம்பியன் பட்டம்.

Jannik Sinner

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி. 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி.

DC

ஐபிஎல் இன்றைய போட்டியில் மும்பை ராஜஸ்தான் அணிகள் மோதல். முதல் வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி வீரர்கள் தீவிரம்.

MIvsRR

தொடர்ந்து 25வது மாதமாக 100 கோடியை தாண்டியது திருப்பதி உண்டியல் காணிக்கை. கடந்த மாதம் 118 கோடி ரூபாய் காணிக்கை மூலம் வந்ததாகத் தேவஸ்தானம் தகவல்.

Thirupathi

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்ற விரக்தியில் கச்சா தீவு பிரச்சனையை பிரதமர் நரேந்திர மோடி எழுப்புவதாக கார்கே கண்டனம்.

Mallikarjun Kharge

குமரி மாவட்டம் இரையுமன்துறை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம். குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் பரபரப்பு.

Sea Rages

மடகாஸ்கர் நாட்டில் மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல். குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம். 20 பேர் வரை உயிரிழப்பு.

Madagascar Storm

மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் booth slip விநியோகம். அரசு அலுவலகம் மூலம் வீடு வீடாக சென்று வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை.

Booth Slip, Election Commision
Pallavaram