சுருக்குப்பை செய்திகள் (16.03.2024)

கல்கி டெஸ்க்

தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 3 மணி அளவில் மக்களவை மற்றும் நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கும் எனவும், புது தேர்தல் ஆணையர் இரண்டு பேருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்திய பின் முடிவு அறிவிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

Election Commision

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் திமுக அரசு எதிரியாக உள்ளதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

PM modi

வரும் 18ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோயம்புத்தூரில் பங்கேற்கும் பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பேரணி செல்லும் வழியின் தூரம் மற்றும் நேரம் ஆகியவற்றை காவல் துறையே முடிவு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

PM Modi

அதிமுகவின் கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஒ பன்னீர் செல்வத்திற்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் திங்கட்கிழமை அன்று தீர்ப்பு.

OPS, EPS

சி ஏ ஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க இணையதளம் செயல்படும் நிலையில் கூடுதல் வசதியாக மொபைல் செயலி அறிமுகப்படுத்தியது உள்துறை அமைச்சகம்.

CAA APP

பெங்களூருவில் நாளுக்கு நாள் மோசமாகி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டால் use and throw பொருட்களை மக்கள் அதிகமாக நாடுகிறார்கள், அதிகரிப்பு. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது உணவை ஆர்டர் செய்து வருவது, கழிவறை பயன்படுத்த வணிக வளாகங்களை நாடுவது என வாழ்க்கை முறையே மாறியிருப்பது பரிதாபம்.

Bangalore Water Shortage

RCB அணி வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று . இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

RCB Team

நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

MK Stalin

அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இனி 60 நாட்களுக்கு முன்பு இருந்தே முன்பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு போக்கு வரத்து கழகம் அறிவித்துள்ளது.

Govt Bus

புதுச்சேரியில் அரசு உழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து நடவடிக்கை

Government Staff

வெயிலின் தாக்கம் தீவிரம் அடையந்த நிலையில் கொடைகானலில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி.

Rain | Image Credit: elmundo

தமிழ்நாட்டில் கோடை தொடங்குவதற்கு முன்பே சுட்டெரிக்கிறது வெயில். வழக்கத்தை விட 3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை.

Summer Heat

சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே நாளை 44 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து. பராமரிப்பு பணி காரணமாக இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவுப்பு.

Southern Railway

நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு அடைகிறது. நடுப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

Neet Exam

பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, எம் எஸ் பாஸ்கர், ஊர்வசி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Movie Poster

டாடா டெக்னாலஜிஸ் COO ஆக தமிழ்நாட்டை சேர்ந்த சுகன்யா சதாசிவன் நியமனம்.

Sukanya Satashivan

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் சிறப்பான முறையில் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

MK Stalin