ChatGPT நேத்து வந்ததா? 70 வருஷத்துக்கு முன்னாடியே உருவான AI சீக்ரெட்ஸ்!

கிரி கணபதி

இன்று ChatGPT தொடங்கி ஸ்மார்ட்போன் வரை எங்கும் AI-யின் ஆதிக்கம் தான் பரவியுள்ளது. ஆனால் இது ஒரே இரவில் உருவானது கிடையாது; பல தசாப்தங்களாக வளர்ந்த செயற்கை நுண்ணறிவின் சுவாரஸ்யமான வரலாற்றை இங்கே பார்ப்போம்.

AI History

1. (1950): 1950-ல் ஆலன் டூரிங் என்பவர் 'இயந்திரங்களால் சுயமாகச் சிந்திக்க முடியுமா?' என்ற கேள்வியை உலகத்தின் முன் வைத்தார். இதுவே செயற்கை நுண்ணறிவு என்ற மாபெரும் துறை உருவாவதற்கான மிக முக்கிய விதையாக அமைந்தது.

AI History

2. (1956): 1956-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு அறிவியல் மாநாட்டில்தான் 'Artificial Intelligence' என்ற வார்த்தை முதன்முதலில் அறிமுகமானது. அந்த மாநாட்டை நடத்திய John McCarthy என்பவர்தான் இந்தத் துறையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

AI History

3. (1966): உலகத்தின் முதல் Chatbot 'எலிசா' (ELIZA) என்ற பெயரில் 1966-ல் உருவாக்கப்பட்டது. இது ஒரு மனநல மருத்துவர் போல மனிதர்களுடன் மிகவும் இயல்பாக உரையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

AI History

4. (1970 - 1980): ஆரம்பகட்ட வெற்றிக்குப் பிறகு, பல வருடங்களாக AI தொழில்நுட்பத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடங்கிப் போனது. போதுமான டேட்டா மற்றும் கம்ப்யூட்டர் வேகம் இல்லாததே இந்த முடக்கத்திற்கு முக்கியக் காரணமாகும்.

AI History

5. (1980): 1980-களில் மனிதர்களைப் போலவே ஒரு குறிப்பிட்ட துறையில் சிந்தித்து முடிவெடுக்கும் 'எக்ஸ்பர்ட் சிஸ்டம்ஸ்' அறிமுகமானது. இது பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தொழில் ரீதியான ஆலோசனைகளை வழங்கப் பெரிதும் உதவியது.

AI History

6. (1997): 1997-ல் ஐபிஎம் (IBM) நிறுவனம் உருவாக்கிய 'டீப் ப்ளூ' (Deep Blue) என்ற சூப்பர்கம்ப்யூட்டர் உலக செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவை வீழ்த்தியது. ஒரு தலைசிறந்த மனித மூளையை இயந்திரம் வென்ற முதல் வரலாற்றுச் சம்பவம் இதுதான்.

AI History

7. (2000s): 2000-க்குப் பிறகு இன்டர்நெட் பயன்பாடு உலகெங்கும் அதிகரித்ததால், பயிற்சிக்குத் தேவையான டேட்டாக்கள் மிக எளிதாகக் கிடைத்தன. இதனால் 'மெஷின் லேர்னிங்' (Machine learning) தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து AI-க்கு மீண்டும் உயிரூட்டியது.

AI History

8. (2010): 2011-ல் ஆப்பிள் நிறுவனம் 'சிரி' (Siri) என்ற வாய்ஸ் அசிஸ்டண்ட்டை மொபைலில் அறிமுகம் செய்தது. அதன் பிறகு கூகுள் அசிஸ்டண்ட், அலெக்சா போன்ற AI கருவிகள் நேரடியாக மனிதர்களின் வீடுகளுக்கே வந்துவிட்டன.

AI History

9. (2016): செஸ் விளையாட்டை விட மிகக் கடினமான 'கோ' (Go) என்ற போர்டு கேமில் 'ஆல்ஃபா கோ' என்ற AI உலக சாம்பியனை வீழ்த்தியது. இது மனிதர்களின் உள்ளுணர்வையும் ஒரு இயந்திரத்தால் கணிக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது.

AI History

10. (2020s): இன்று நாம் பயன்படுத்தும் ChatGPT, Gemini, Claude போன்ற 'ஜெனரேட்டிவ் AI' தொழில்நுட்பம் உலகத்தையே முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுள்ளது. மனிதர்கள் எழுதும் கவிதைகள், வரைபடங்கள் என அனைத்தையும் இது சில நொடிகளில் சுயமாக உருவாக்கி மிரள வைக்கிறது.

AI History

எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

AI History
Relationship Tips
இதையெல்லாம் செஞ்சா உங்க பார்ட்னர் உங்ககிட்ட இன்னும் நெருக்கமாவாங்க... 10 சீக்ரெட் டிப்ஸ்!