நான்சி மலர்
smart fashion items:
1. மெட்டாவின் ரே-பான் டிஸ்ப்ளே(Ray-Ban Display) போன்ற AR தொழில்நுட்பம் கொண்ட மூக்கு கண்ணாடிகள், நாம் பேசுவதையும், நமக்கு புரிகின்ற மொழிபெயர்ப்பையும்(Translation) நேரடியாக நாம் பார்க்கும் லென்ஸில்(Lens) காட்டுகின்றன.
2. காதுகளில் அணியும் ‘பயோமெட்ரிக் காதணிகள்’(biometric earrings) காது மடலில் இருந்தே நம் உடலை பற்றிய துல்லியமான சுகாதார செய்திகளை நமக்கு தருகின்றன.
3. விரலில் அணியும் ‘ஆடம்பர ஸ்மார்ட் மோதிரங்களும்’(Smart rings), நம் உடலுக்கு தேவையான நிகழ்நேர உடற்பயிற்சி, தூக்க நேரங்களை துல்லியமாக தருகின்றன.
4. சில விஷேச டெனிம் ஆடைகள்(Denim), நம் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும் ‘குர்தாக்கள்’(Kurtas) போன்றவை இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளன.
5. ‘பயோசெராமிக் பைஜாமாக்கள்’ உடலுக்கு நன்மை அளிக்கும் அகச்சிவப்பு ஆற்றலைத் தோலுக்குள் செலுத்துகின்றன.
6. ஸ்மார்ட் சாக்ஸ்கள் நீரிழிவு நோய்களால் பாதங்களில் உண்டாகும் காயங்களை தடுக்க உதவுகின்றன.
7. யுஎஸ்பி சார்ஜிங் பேக்பேக் பயணங்களின் போது லேப்டாப் மற்றும் இதர பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கப் பயன்படுவதோடு, வெளிப்பகுதியிலேயே மொபைல் சார்ஜ் செய்துகொள்ள பவர் பேங்க் இணைப்பு வசதியைக் கொண்ட பைகள்.
8. காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் ரிங், மோதிரம் போல விரலில் அணியலாம். கிரெடிட் கார்டு அல்லது பணம் செலுத்த வேண்டிய இடங்களில், இந்த மோதிரத்தைக் காட்டியே எளிமையாக பில் செலுத்த முடியும்.
9. போஸ்டுச்சர் கரெக்டர் ஷர்ட், நாம் வேலை செய்யும் போது அல்லது உட்காரும் போது கூன் விழாமல், முதுகெலும்பு நேராக இருக்க உடலின் அமைப்பைத் தக்க வைக்க உதவக்கூடிய சென்சார் மற்றும் சிறப்பு துணி தொழில்நுட்பம் கொண்ட ஆடைகள்.
10. செல்ஃப்-டையிங் ஷூக்கள், காலணிகளின் நாடாக்களை நாமே கட்டத் தேவையில்லை. சென்சார் மூலம் தானாகவே இறுகிக்கொள்ளும் அல்லது நடக்கும் தூரத்தைக் கணக்கிடும் ஷூக்கள்.