சூரியன் வெறும் தூசி தான்! விண்வெளியின் 8 பிரம்மாண்ட நட்சத்திரங்கள் – இதோ முழு பட்டியல்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

1. யுஒய் ஸ்கூட்டி (UY Scuti): stars bigger than sun

சூரியனை விட சுமார் 1,700 மடங்கு பெரியது. இது நீண்ட காலமாக பிரபஞ்சத்தின் மிகப்பெரிய நட்சத்திரமாக கருதப்பட்டது. இந்த நட்சத்திரத்தை சூரியன் இருக்கும் இடத்தில் வைத்தால், அதன் எல்லை வியாழன் (Jupiter) கிரகத்தின் சுற்றிப் பாதையைத் தாண்டிச் செல்லும்.

stars bigger than sun | Gemini image

2. ஸ்டீபன்சன் 2 -18 (Stephenson 2-18):

சூரியனை விட சுமார் 2,150 மடங்கு பெரியது. தற்போது மனிதர்களால் கண்டறியப்பட்ட பிரபஞ்சத்தின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இதில் ஒளியின் வேகம் ஒருமுறை சுற்றிவர வேண்டும் என்றாலே பல மணி நேரம் ஆகும்.

stars bigger than sun | Gemini image

3. வெஸ்டர்லண்ட் 1-26 (Westerlund 1-26):

சூரியனை விட சுமார் 1,500 முதல் 2,000 மடங்கு பெரியது. இது ஒரு சிவப்பு மகா விண்மீன் (Red Supergiant) ஆகும். இது ஒரு விசித்திரமான ரேடியோ அலைகளை உமிழும் நட்சத்திரமாக விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் பார்க்கப்படுகிறது.

stars bigger than sun | Gemini image

4. விஒய் கேனிஸ் மேஜோரிஸ் (VY Canis Majoris):

சூரியனை விட சுமார் 1,420 மடங்கு பெரியது. ஒரு காலத்தில் இதுவே உலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக அறியப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 3,900 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த நட்சத்திரம், தன் வாழ்நாளின் இறுதிப் பகுதியில் உள்ளதால் அதிகப்படியான எடையை விண்வெளியில் இழந்து வருகிறது.

stars bigger than sun | Gemini image

5. டபிள்யூஓஎச் ஜி 64 (WOH G64):

சூரியனை விட சுமார் 1,540 மடங்கு பெரியது. நம்முடைய பால்வெளி மண்டலத்திற்கு (Milky Way) வெளியில், 'மகா மெகல்லானிக் மேகம்' (Large Magellanic Cloud) என்ற அண்டை விண்மீன் திரளில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் இதுவாகும்.

stars bigger than sun | Gemini image

6. வி354 செஃபி (V354 Cephei):

சூரியனை விட சுமார் 1,520 மடங்கு பெரியது. நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள இந்த நட்சத்திரம் பால்வீதியின் மிகவும் பிரகாசமான மற்றும் குளிர்ந்த நட்சத்திரங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

stars bigger than sun | Gemini image

7. கேடபில்யூ சாகிட்டாரே (KW Sagittarii):

சூரியனை விட சுமார் 1,460 மடங்கு பெரியது. தனுசு (Sagittarius) விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ள இந்த நட்சத்திரம், சூரியனை விட பல லட்சம் மடங்கு அதிக ஒளிர்வை (Luminosity) வெளிப்படுத்தக் கூடியது.

stars bigger than sun | Gemini image

8. கேஒய் சிக்னி (KY Cygni):

சூரியனை விட சுமார் 1,420 மடங்கு பெரியது. சிக்னஸ் விண்மீன் கூட்டத்தில் உள்ள இது ஒரு மாபெரும் சிவப்பு நட்சத்திரம். இதன் அசாத்தியமான பிரகாசம் காரணமாக விஞ்ஞானிகளின் தொடர் ஆராய்ச்சிக்கு உட்பட்ட ஒன்றாக இது இருக்கிறது.

stars bigger than sun | Gemini image
Rare animals | Gemini image
​"முடிந்தது கதை" என்று நினைத்த விலங்குகள்... மீண்டும் பிறந்து உலகையே அதிர வைத்த அதிசயம்!