எஸ்.மாரிமுத்து
நம் நெஞ்சுக்கு உரம் அளித்து அறிவுக்கு தெளிவூட்டும் பாரதியாரின் 10 பொன்மொழிகள். ஊக்கம் கொடுக்கும் சில வரிகள் என்ன என்று பார்ப்போம்.
மனமே கேள்! விண்ணின் இடி உன் முன் விழுந்தாலும் மனப்பான்மை தவறி நடுங்காதே! பயத்தால் ஏதும் பயம் இல்லை!
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு! எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி!
கடமை அறியோம் தொழில் அறியோம்! கட்டென்பதனை வெட்டென்போம்! மானுடர் உலாவிடிலும் வான் உலகம் நீர் தரும் என்றால் நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் அல்லவா? உணவை இயற்கை கொடுக்கும்; உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்!
சென்றது இனி மீளாது, சென்றதனைக் குறிக்காமல் இன்று புதிதாய் பிறந்தோம் என்று எண்ணி வாழ்வீர்!
ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோ? என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ, ' தன்னை வென்றால் ' அவை யாவும் பெறுவது சத்தியமாகும்.
அச்சத்தை வேட்கை தனை அழித்துவிட்டால், அப்போது சாவும் அங்கே அழிந்து போகும். ஐந்து புலன்மிசை வெற்றி கொள்வோம்; அப்போது நம்தாளிடை வீழ்த்தி வையகம் போற்றும்.
உள்ளும் புறமும் உள்ளதெல்லாம் தானாகும் வெள்ளமே தெய்வம்! பலவகையாக பரவிடும்வேண்டும் பரம்பொருள் ஒன்றே; அதன் இயல்பு ஒளி ஊறும் அறிவு.
தோன்றி அழிவது வாழ்க்கை, அது இன்பம் துன்பம் வெறுமை என்று எது வருமேனும் களி மூழ்கி இறத்தல் முக்தி!
சாத்திரங்கள் வேண்டாம்! சதுமறைகள் ஏதும் இல்லை!தோத்திரங்கள் இல்லை! உள்ளம் தொட்டு நின்றால் போதும்டா! காலமே மதியிறுக்கு ஓர் கருவி !
தேமதுர தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்! சினம் கொள்வார் தம்மைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாரை ஒப்பவர் ஆவார்!