ஆர்.ஜெயலட்சுமி
புத்தகங்கள் என்பவை காலமெனும் கடலில் கரையில் நிறுத்தப்பட்டுள்ள கலங்கரை விளக்கங்கள் - விப்பிள்.
ஒரு நூல் இதயத்தில் இருந்து வெளிவந்திருந்தால் அது மற்ற இதயங்களுக்குள் போவதற்கு வழி செய்து கொள்ளும் - கார் லைல்.
புத்தகங்களை, நண்பர்களை தேர்ந்தெடுப்பது போல் தேர்வு செய்திட வேண்டும் - தாமஸ் ஹூட்.
நாம் பெரும் கருத்துக்களின் அறிவை செயலில் பயன்படுத்தாவிட்டால் நூல்கள் வெறும் பழைய தாள்களே ஆகும் - புல்வர்.
புத்தகங்கள் இல்லாத வீடு சாளரங்கள் இல்லாத அறை போன்றது - மான்.
நம்மை அதிகமாக சிந்திக்க செய்பவைகளே நமக்கு அதிகமாக உதவக் கூடியவை, அவை தான் புத்தகங்கள் - தியோடர் பார்க்கர்.
ஒரு நூல்நிலையக் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை கதவு தாழிடப்படுகிறது - பைபிள்.
நல்ல புத்தகங்கள் ஞான பொக்கிஷத்தின் திறவுகோல்கள். இன்ப நிலத்தின் வாயில்கள், நன்னெறியில் மக்களை நடத்திச் செல்லும் பாதைகள் - எமர்சன்.
எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில் தான் உயிர் ஒளி இருக்கிறது. உலகில் இறவாத பொருள் புத்தகங்களே - சோயத்தே.
நல்ல புத்தகங்கள் என்பது உங்கள் நண்பர்களை விட சிறந்தனமாகும். அவை இன்று மட்டுமல்ல என்றைக்கும் - டூப்பர்.
புத்தகங்களில் ருசி பார்க்க வேண்டும். சில புத்தகங்களை விழுங்க வேண்டும். சிலவற்றை அசை போட வேண்டும் . சிலவற்றை அப்படியே ஜீரணிக்க வேண்டும் - பேகன்.
நல்ல புத்தகங்கள் நாம் வைத்திருப்பது என்பது சட்டை பையில் பூந்தோட்டத்தை வைத்திருப்பது போன்றதாகும் - ஜவஹர்லால் நேரு.
அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்து படிக்கின்றார்கள் - வின்யூடவ்.
ஒருமுறை படிக்க தகுந்த அனேக நூல்கள் இருமுறை படிக்கக்கூடியவைகளாகவும் இருக்கும் - மார்லி.
புத்தகம் என்பது சிறந்த நினைவுகளின் பதிவு - எமர்சன்.