பாரதி
மதம், மொழி, நாடு ஆகியவற்றைக் கடந்து மக்களை ஒற்றுமையாக வைத்திருக்கும் ஒன்று விளையாட்டு. அனைத்து கவலைகளையும் மறந்துவிட்டு மூழ்குவதும் விளையாட்டில்தான். அதே கவலையைத் தோல்வியின் மூலம் கொடுப்பதும் விளையாட்டுத்தான். விளையாட்டுகள் வீரர்களுக்கு மட்டுமல்ல ரசிர்களுக்கும் உணர்வுப்பூர்வமானவை.
கால்பந்து:
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 4 பில்லியன் ரசிகர்களைக் கொண்ட கால்பந்து பிரபல பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளது. அதேபோல் சமீபக்காலமாக ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களிலும் பிரபலமாகி வருகிறது.
கிரிக்கெட்:
உலகளவில் 2.6 பில்லியன் ரசிகர்களைக் கொண்ட இந்த கிரிக்கெட், விளையாட்டு பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவின் தேசிய விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.
கூடைப்பந்து:
உலக அளவில் 2.2 பில்லியன் ரசிகர்களைக் கொண்ட கூடைப்பந்து விளையாட்டு அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. NBA (National Basketball Association) என்ற பெயரில் உலகளாவிய கூடைப்பந்து விளையாட்டு ஆண்டுதோறும் நடைபெறும்.
ஹாக்கி:
இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருந்த ஹாக்கி 2 பில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இது பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அர்ஜென்டினா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பிரபலமானது. அதேபோல் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஐஸ் ஹாக்கி புகழ்பெற்ற விளையாட்டாகும்.
டென்னிஸ்:
1 பில்லியன் ரசிகர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது டென்னிஸ். இது அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டாகும்.
கைப்பந்து:
உலகளவில் 900 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட கைப்பந்து விளையாட்டு 6 வது இடத்தில் உள்ளது.
டேபிள் டென்னிஸ்:
டேபிள் டென்னிஸும் 900 மில்லியன் ரசிகர்களுடன் 7 வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதுமே புகழ்பெற்ற இந்த விளையாட்டு ஆசியாவில் மட்டும் சற்று கூடுதல் பிரபலமானது.
பேஸ்பால்:
எட்டாவது இடத்தில் உள்ள பேஸ்பால் 500 மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இது வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் மிகவும் பிரபலமானது. சமீபக்காலமாக ஐரோப்பாவிலும் பிரபலமாகி வருகிறது.
ரக்பி:
இதுவும் கால்பந்தாட்டம் போல்தான் விளையாடப்படும். ஆனால் ஓவல் வடிவ பந்து பயன்படுத்தப்படும். இது 400 மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளது. ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் பிரபலமானது.
அமெரிக்கன் கால்பந்து:
அமெரிக்கன் கால்பந்து விளையாட்டு 400 மில்லியன் ரசிகர்களைக் கொண்டு 10 வது இடத்தில் உள்ளது. இந்த விளையாட்டு அமெரிக்காவில் மட்டுமே பிரபலமானது.