காலையில் இதெல்லாம் சாப்பிடக்கூடாது!

விஜி

காபி:

காபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அது தீவிரமான பிரச்சனையை உண்டாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீரை குடித்த பின் காபி குடித்தால் நல்லது.

டீ:

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.

தயிர்:

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் அளவு உடலில் அதிகரித்து கால்சியம் மற்றும் மக்னீசியம் அளவுகளில் எற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.

தக்காளி:

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இது கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

காரமான உணவுகள்:

காரமான உணவுகள் எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ள கூடாது.