உலகின் பிரபலமான 10 மிதக்கும் உணவகங்கள்!

கிரி கணபதி

Ruster Dhow:

உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவகமாக துபாயின் ரூஸ்டர் தோவ் இருக்கிறது. இதில் ஒரே சமயத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட நபர்கள் உணவருந்த முடியும். இந்த உணவகத்திலிருந்து துபாயின் அழகிய காட்சியை நாம் ரசிக்க முடியும்.

Ruster Dhow

Sea Palace:

ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட முதல் மிதக்கும் சீன உணவகம்தான் Sea Palace என்ற மிதக்கும் உணவகம். இது ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ளது. இதன் சிறப்பே அதன் வெளிப்புறத் தோற்றம் தான்.

Sea Palace

Saigon உணவகம்:

வியட்னாமில் இருக்கும் இந்த உணவகம், மலிவு விலையில் உணவருந்த விரும்புபவர்கள் செல்வதற்கான உணவகங்களுள் முதலிடத்தில் உள்ளது.

Saigon உணவகம்

Jumbo மிதக்கும் உணவகம்:

ஹாங்காங்கில் உள்ள அபெர்டீன் துறைமுகத்தில் அமைந்துள்ள ஜம்போ மிதக்கும் உணவகம், எந்த ஒரு சுற்றுலாப் பயணியும் தவறவிடக்கூடாத உணவகங்களில் ஒன்றாகும்.

Jumbo மிதக்கும் உணவகம்

Cloud 9:

கடலில் மிதந்துகொண்டே நீங்கள் உணவருந்த விரும்பினால், Cloud 9 உணவகத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். பிஜியில் மாமனுகா தீவில் இது அமைந்துள்ளது.

Cloud 9

Veli Lake மிதக்கும் உணவகம்:

இந்த பதிவில் இருக்கும் டாப் 10 மிதக்கும் உணவகங்களில் இந்தியாவில் இருக்கும் ஒரே உணவகம் இதுதான். அதுவும் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் இருக்கிறது.

Veli Lake மிதக்கும் உணவகம்

Salt & Sill:

இந்த விருது பெற்ற மிதக்கும் கடல் உணவகம் ஸ்வீடனின் தனித்துவமான உணவு வகைகளால் நிரம்பியுள்ளது. ஸ்வீடனின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த உணவகம், பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.

Salt & Sill

PS Tattershall Castle:

லண்டனில் இருக்கும் இந்த உணவகம் நல்ல வரலாற்றைக் கொண்ட ஒரு கோட்டையாகும். 1934 இல் தனித்துவம் வாய்ந்த கப்பல் உணவகமாக இருந்த இது, லண்டன் கடற்படைக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி ஓய்வு பெற்றதாகும்.

PS Tattershall Castle

Cat Ba Bay:

வியட்நாமின் முத்து தீவு என அழைக்கப்படும் Cat Ba தீவில் இது அமைந்துள்ளது. இது வழக்கமான மிதக்கும் உணவகம் போலல்லாமல் பல்வேறு படகுகளாலும் நிரம்பியுள்ளது.

Cat Ba Bay

BBQ Donut's மிதக்கும் உணவகம்:

ஜெர்மனியில் இருக்கும் பிபிக்யூ டோனட் மிதக்கும் உணவகம். பார்ப்பதற்கு டோனட் வடிவிலான படகு போல இருக்கும். ஒவ்வொரு டோனட் வடிவ படகிலும் பத்து பேர் அமர்ந்து உணவருந்தலாம்.

BBQ Donut's மிதக்கும் உணவகம்