உலக தாய்ப்பால் வாரம்!

எல்.ரேணுகாதேவி

உலக சுகாதார மையம் குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்க வலிறுத்துகிறது.

பச்சிளம் குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டும் கொடுப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்த் தொற்றுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

குழந்தைக்கு 2 முதல் 3 வயது வரை தாய்ப்பால் கொடுப்பதால் தாய் கர்பபைவாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்.

மகப்பேறு காலத்தில் நீரிழவு, பிசிஓடி, தைராய்டு மற்றும் உடல்பருமன் போன்ற பிரச்சனை உள்ள இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல் ஏற்படும்.

lip tie,tongue tie பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை உறிஞ்சி குடிக்க சிரமப்படுவார்கள்.

தாய் பயன்படுத்திவந்த சோப், வாசனை திரவியத்தி மாற்றினால் குழந்தை தாய்ப்பால் குடிக்காமல் போக வாய்ப்புள்ளது.

6 மாதத்திற்கு மேல் குழந்தைக்கு திடப்பொருட்கள் கொடுக்கும் சில மணிநேரங்கள் முன்பு தாய்ப்பால் கொடுப்பது ஆரோக்கியமானது.

தாய்ப்பால் கொடுப்பதால் எலும்பு தேய்மான பிரச்சனை ஏற்படாது.

மகப்பேறு காலத்தில் கால்சியத்திற்கு தேவையான பாதாம், சீயா விதைகள் போன்ற பருப்பு வகைகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.

சோப்பு மற்றும் லோஷன் போன்றவற்றில் தாய்ப்பாலை பயன்படுத்துவது நல்ல யோசனைதான்.