நான்சி மலர்
நம் வீட்டில் பூனை (Cat) வளர்ப்பது நம்முடைய மனநிலைக்கும், ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தரும். பூனை வளர்ப்பதால் கிடைக்கும் முக்கியமான 10 நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பூனையைத் தடவிக் கொடுப்பது உடலில் Oxytocin ஹார்மோனைச் சுரக்கச் செய்து மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
பூனை வளர்ப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் 30 சதவீதம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பூனைகள் துணையாக இருக்கின்றன என்ற உணர்வு நம் மனதுக்கு ஆறுதல் அளிக்கும்.
பூனைகள் ஒருவிதமான Purring சத்தத்தை எழுப்பும். இது மனிதர்களின் எலும்புகள் மற்றும் தசைகளைச் சீராக்கவும், காயங்களை விரைவாகக் குணப்படுத்தவும் உதவும்.
பூனைகள் வீட்டில் எலிகள், பூச்சிகள் வராமல் இயற்கையாகவே பாதுகாக்கும்.
பூனைகள் தங்களைத் தாங்களே சுத்தமாக வைத்துக் கொள்ளும். இதனால் பூனைகளைப் பராமரிப்பது எளிது.
பூனைகளுடன் வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பூனைகளுடன் தூங்குவது பாதுகாப்பான உணர்வையும், நல்ல தூக்கத்தையும் தரும்.
பூனைகள் வளர்ப்பது குழந்தைகளுக்குப் பொறுமையையும், கருணையையும் கற்றுக் கொடுக்கும்.
பூனைகளின் சேட்டைகளும், விளையாடும் விதமும் நம் வீட்டை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.