உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 14 உணவுகள்!

எஸ்.விஜயலட்சுமி

உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் உணவு வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

Vegetables | Imge credit: pinterest

சிட்ரஸ் பழங்கள்: திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை ஆகிய பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர சேர்மங்கள் உள்ளன. இவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளை குறைக்கும்.

Citrus fruits | Imge credit: pinterest

விதைகள்: சியா விதைகள் ஆலிவ் விதைகள், பூசணி விதைகள் போன்றவற்றிலும் பிஸ்தா, பாதாம், அக்ரூட் போன்ற பருப்புகளிலும் நார்ச்சத்து மற்றும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான காரணியாக செயல்படும்.

Nuts | Imge credit: pinterest

பருப்பு வகைகள்: பட்டாணி, பீன்ஸ், பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, கொள்ளு போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

Grains | Imge credit: pinterest

பெர்ரி பழங்கள்: அவுரி நெல்லிகள், ராஸ்பெர்ரிகள், திராட்சை, குருதி நெல்லிகள் போன்றவை அற்புத ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

Berry fruits | Imge credit: pinterest

முழு தானியங்கள்: பழுப்பு அரிசி, சோளம், முழு ஓட்ஸ் போன்ற முழு தானியங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

Oats | Imge credit: pinterest

ஆலிவ் எண்ணெய்: இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான ஆபத்தை தடுக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஒமேகா 9 கொழுப்பு அமிலம் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன.

Oilve Oil | Imge credit: pinterest

கேரட்: இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் சிறந்த காய்களில் ஒன்று கேரட். தினமும் ஒரு கப் துருவிய கேரட் சாப்பிடுவது நல்லது.

Carrot | Imge credit: pinterest

முட்டை: ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் இரத்த அழுத்த மேலாண்மையை சீர்படுத்தும் உணவு இது. இரத்த அழுத்த நோயாளிகள் வாரத்திற்கு ஐந்து முட்டைகள் சாப்பிடலாம்.

Egg | Imge credit: pinterest

தக்காளி: தக்காளியில் பொட்டாசியம் மற்றும் லைகோபின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. லைக்கோபின் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் . தினமும் ஒரு தக்காளியாவது சாப்பிட வேண்டும்.

Tomatoes | Imge credit: pinterest

புரோக்கோலி: இதில் உள்ள ஃபிளாவனாய்டு, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.

Brocoli | Imge credit: pinterest

தயிர்: இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் ஒர் அற்புத உணவு தயிர்.

Curd | Imge credit: pinterest

மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள்: செலரி விதை, கொத்தமல்லி, குங்குமப்பூ, மிளகு, பூண்டு, வெங்காயம், மிளகாய் தூள், சீரகம், சிவப்பு மிளகாய், லவங்கப்பட்டை, ஏலக்காய், துளசி, இஞ்சி போன்ற மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் உணவிற்கு சுவையூட்டுவதுடன் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

Masala products | Imge credit: pinterest

உருளைக்கிழங்கு: தோலுடன் சேர்த்து வேக வைக்கப்பட்ட ஒரு சிறிய உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. ஒரு நடுத்தர அளவில் உள்ள வாழைப்பழத்தில் உள்ளதை விட அதிகமான பொட்டாசியம் இதில் உள்ளது.

Potatoes | Imge credit: pinterest

கிவி பழம்: வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்களை உள்ளடக்கிய கிவி பழம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. இது நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிரம்பியது

Kiwi | Imge credit: pinterest
Raayan movie | Credits : Movie crow
அடங்காத அசுரன் RAAYAN!