சைடு எஃபெக்ட் இல்லாமல் குணமாகணுமா? பாட்டி வைத்தியத்தின் 'பவர்' தெரிஞ்சுக்கோங்க!

ஆர்.ஜெயலட்சுமி

1/12. சிறிது தேனில் கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்து ஊற விட வேண்டும். கால் மணி நேரம் கழித்து கழுவி விட்டால் தோல் புதுப்பொலிவுடன் இருக்கும்.

Health Tips

2/12. வேப்பம் கொழுந்து, ஓமம், உப்பு இவற்றை பொடியாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் காய வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குடல் புழு நீங்கும்.

Health Tips

3/12. வியர்வை நாற்றம் நீங்க ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி சம அளவு பயத்த மாவை கலந்து அரைத்து தினந்தோறும் தேய்த்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கி விடும்.

Health Tips

4/12. வாழைப்பூவை பொரியல் செய்து அதை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிலக்கின் போது வரும் வலி உதிரப்போக்கு போன்றவை இருக்காது. 

Health Tips

5/12. பச்சை வெந்தயத்தை நல்ல கெட்டி தயிரில் போட்டு மென்று சாப்பிட சூடு  வயிற்று வலி, வயிற்று புண் நீங்கி விடும்.

Health Tips

6/12. நொச்சி இலையை உப்பு போட்டு வதக்கி இளஞ்சூட்டுடன்  நெற்றியில் பற்று போட்டால் தலைவலி, நீர் கோர்ப்பு குறையும்.

Health Tips

7/12. கேரட் சாறு, தக்காளி சாறு இரண்டையும் கலந்து சிறிது தேன் விட்டு குழந்தைகளுக்கு கொடுப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.

Health Tips

8/12. ஒரு கைப்பிடி அருகம்புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்து குளித்து வந்தால் வேர்க்குரு மறைந்து விடும்.

Health Tips

9/12. சுக்குடன் சிறிது வெந்தயம் சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி தொல்லை நீங்கும்.

Health Tips

10/12. அருகம்புல்லுடன் வெண்ணையை சேர்த்து அரைத்து சாப்பிட நரம்பு தளர்ச்சி குறையும். 

Health Tips

11/12. தயிர், முட்டை, எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து குளித்தால் தலையில் உள்ள பொடுகு மறையும்.

Health Tips

12/12. தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை கலக்கி சூடு படுத்தி வலி உள்ள மூட்டுகளில் தேய்த்து வந்தால் மூட்டு வலி குறைந்து விடும்.

Health Tips

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Health Tips
Environmental Wellness | AI image
உங்கள் வீடு மற்றும் ஆபிஸை பாசிட்டிவ் எனர்ஜியாக மாற்றும் 10 ரகசியங்கள்!