தேனில் இத்தனை பயன்களா?

ஆர்.கீதா

எலுமிச்சம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர இருமல்  குறையும்.

Honey

ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.

Honey

தேங்காய்ப்பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர குடல் புண், வாய்ப்புண் விலகி விடும்.

Honey

இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர பித்தம் விலகும்.

Honey

பால் சேர்க்காத தேநீரில் கொஞ்சம் தேன் விட்டுச் சாப்பிட்டால் தொண்டை கட்டு விலகும், தொண்டை கரகரப்பு நீங்கும்.

Honey

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர புது ரத்தம் ஊறும்.

Honey

பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல சக்தி  கிடைக்கும்.

Honey

ஒல்லியான பெண்கள் பாலில் தேன் கலந்து தினம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் சதை போடும்.

Honey

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? ஓமத்தை வறுத்துப் பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் உடன் நிவாரணம் கிடைக்கும்.

Honey

பேரீச்ச்சம்பழத்தை இரண்டு மணி நேரம் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து  நிவாரணம் கிடைக்கும்.

Honey

இருமல், கபம் முதலியவற்றால் மூச்சுத்திணறும் குழந்தைகளுக்கு இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு கலவையுடன் தேன் கலந்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

Honey

வெறும் வயிற்றில் தேனுடன் இஞ்சிச்சாறு கலந்து பருகி வர உடல் அசதி நீங்கி விடும்.

Honey

இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் தேனைக் கலந்து தினமும் காலை, மாலை இருவேளை குடித்து வந்தால் இரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.

Honey

இஞ்சிச்சாறுடன் தேனை சம அளவில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் நீங்கி விடும்.

Honey
ஒரு வார்த்தை கூட பேசாமல் பொய்யை எப்படி கண்டுபிடிப்பது?