சி.ஆர்.ஹரிஹரன்
சுக்குப்பொடி, காய்ச்சிய பசும்பால் கலந்து வெறும்வயிற்றில் குடித்து வந்தால் வாயு, சோர்வு, மூட்டுவலி நீங்கும்.
இஞ்சி விழுது, வெல்லத்தூள், நெய் தலா இரண்டு ஸ்பூன் கலந்து பேஸ்ட் போல் குழைத்து காலையில் சாப்பிட்டுவர ஜலதோஷம் குணமாகும்.
வெங்காயச்சாறுடன் சிறிது வெள்ளைப்பூண்டை சேர்த்து, மை போல் அரைத்து, அதை படை, தேமல் மீது காலை, மாலை இருவேளையும் பற்றுப்போட்டு வர பூரண குணமாகும்.
முள்ளங்கியை பசையாக அரைத்து அதனுடன் வாழைத்தண்டு சாறு மற்றும் மோர் கலந்து காலையில் குடித்து வர சிறுநீரகக் கற்கள் கரையும்.
பூண்டு, சுண்ணாம்பு இரண்டையும் அரைத்து நகச்சுற்றுக்குப் போட்டு வர விரைவில் குணம் காணலாம்.
வேப்பம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தடவிவர பேன், பொடுகு போய்விடும். முடி கொட்டாது.
இரண்டு வெற்றிலையுடன் இரண்டு கிராம்பு, ஒரு துண்டு சுக்கு வைத்து பால் தெளித்து, நைஸாக அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கடுமையான தலைவலியும் நீங்கிவிடும்.
ஓமத்தை வாணலியில் பொரித்து ஒன்றிரண்டாகத் தட்டி, நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணக் கோளாறு, சளித்தொல்லைகள் குறையும்.
இருமல் அதிகமாக இருந்தால், சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி இரண்டு பூண்டு பற்கள் போட்டுக்காய்ச்சி இரவு படுக்கும் முன் சாப்பிட்டால் குணம் தெரியும்.
கொய்யாப்பழத் துண்டுகளுடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டு வர சளித்தொல்லை நீங்கும்.
ரோஜா இதழ்களுடன் பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவிவர கரும்புள்ளிகள் மறையும்.