கால்சியம் நிறைந்த உணவுகள் எவை தெரியுமா?

கல்கி டெஸ்க்

உடலுக்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பது எலும்பு. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களால் எலும்பு உருவாகியுள்ளது.

bones

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்குக் குறைந்தது 400 மி.லி. பால் அருந்த வேண்டும்.

dairy products

வயதானவர்களுக்குப் பால் அதிகம் ஜீரணமாவதில்லை. அவர்கள் கால்சியம் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம்.

Old peoples

காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது.

vegetables

அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, அரைக் கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளது.

Keerai

எள் கால்சியம் சத்து நிறைந்த ஒரு எண்ணெய் வித்து, எள்ளை வெல்லம் சேர்த்து உருண்டைகளாகச் செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1800 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளைப் பொடியாகச் செய்து உணவுடன் சாப்பிடலாம்.

Sesame

தினமும் 5 பாதாம் பருப்புகளை ஊறவைத்து அரைத்து பாலுடன் கலந்து குழந்தைளுக்குப் பருகக் கொடுக்கலாம்.

Almonds

கேழ்வரகில் பாலை விட அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்குக் கேழ்வரகு மாவில் முருங்கைக்கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது ஒரு கால்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி. பெரியவர்கள் கூழாகச் செய்து சாப்பிட நல்ல பலனிருக்கும்.

Kelvaragu

எலும்புத் தேய்மானத்துக்கு மிக அருமையான (உணவு) மருந்து பிரண்டை என்னும் கொடி. பிரண்டை எலும்பு அடர்த்தி, இணைப்பு திசு, வலி வீக்கத்தைக் குறைக்க, உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்க என பல்வேறு பலன்களை கொடுக்கிறது.

- டாக்டர் இரா.பத்மப்ரியா, சித்த மருத்துவர்

pirandai
kamal haasan