எஸ்.மாரிமுத்து
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி உள்ள இடத்தில் தடவினால் கட்டி உடைந்து குணமாகும்.
பூவரசு இலைகளை அரைத்து நன்கு வதக்கி வீக்கம் உள்ள இடத்தில் கட்ட வீக்கம் குறையும்.
வேப்பங்கொழுந்து, துளசி இலை இரண்டையும் சிறிது அரைத்து தினமும் சிறிய உருண்டை சாப்பிட்டு வர அரிப்பு அலர்ஜி குணமாகும்.
கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் அரிப்பு, புண்கள் ஆறும். இதனை சிறிது அரைத்து மோரில் கலந்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும்.
நாயுடு இலையுடன் ஜாதிக்காய் சிறிது சேர்த்து மை போல் அரைத்து தேமல் மேல் தடவி வந்தால் தேமல் குணமாகும்.
மா இலையை தணலில் போட்டு, வாய் திறந்து அந்தப் புகையை பிடித்தால் தொண்டை கட்டு சரியாகும்.
மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி தடவி வர தலைமுடி நன்றாக செழித்து வளரும்.
முசு முசுக்கை இலையை அரிந்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி, உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மூச்சு திணறல் குணமாகும்.
தூதுவளை இலையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் சரியாகும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை கூட்டாக செய்து சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.
பொன்னாங்கண்ணி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். இதனை கசாயமாக வைத்து குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும்.
கற்பூரவள்ளி இலையை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும்.
அருகம்புல், வெற்றிலை, மிளகு போன்றவற்றை கஷாயமாக்கி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்; ரத்த ஓட்டம் சீராகும்.
நொச்சி இலையை மஞ்சள் சேர்த்து ஆவி பிடித்தால் எல்லா தலைவலியும் குறையும். இதனை உலர்த்தி தலையணை உறைக்குள் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும்.
தழுதாழை இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல் வலி குறையும். மூட்டு வலி உள்ள இடத்தில் இதன் இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும்.