சத்துமிக்க சாத்துக்குடி!

ஆர்.பிரசன்னா

இதய ஆரோக்கியம்:

தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது, உடலில் இரத்த ஓட்டம் சீராக்குவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

சிறுநீர் தொற்று:

சிறுநீர் தொற்று பிரச்சனையை அவ்வப்போது எதிர்கொள்பவர்கள் தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி சாறு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொற்று நீங்கும்.

கர்ப்ப காலத்தில்...

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும்  குமட்டல் மற்றும் வாந்தியின் காரணமாக உண்டாகும் உடல் நீரிழப்பை ஈடுகட்ட சாத்துக்குடி பெரிதும் உதவுகிறது. மேலும் இது கருவின் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும்.

எலும்புகளின் வலுவிற்கு:

குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகளின் வலுவிற்கும் இன்றியமையாத கால்சியம் சத்து சாத்துக்குடியில் நிறைந்துள்ளது. மூட்டுவலி, கீல்வாதம் உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் அருந்தி வந்தால் அப்பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

கண்களின் ஆரோக்கியம்:

தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி சாறு கண்களுக்கு நன்மை பயக்கும். இது கண் தொற்று மற்றும் கண்புரைகளைத் தடுக்கிறது.

வயிற்றுப்போக்கு குணமடைய:

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் சாத்துக்குடி ஜீஸ் குடித்தால் உடனே வயிற்றுப்போக்கு குணமடையும்.

வாய் துர்நாற்றம் நீங்க:

வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாத்துக்குடி சாறு குடித்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வாய் புண்கள் ஏற்படும் போது சாத்துக்குடி சொளை சாப்பிடுவது நல்லது

சருமம் பளபளக்க:

சாத்துக்குடியில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.

புற்றுநோய்க்கு...

இந்த பழத்தில் லிமோனோய்ட்ஸ் என்கிற பொருள் உள்ளது, இதை தினமும் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read More Stories