கே.எஸ்.கிருஷ்ணவேனி
ஜூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. யோகா மனதை அமைதி படுத்தவும், ரத்த ஓட்டம் மற்றும் தோரணையை மேம்படுத்தவும் உதவுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக 2014 ஆம் ஆண்டு அறிவித்தது.
"யோகா என்பது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான உலகளாவிய விருப்பத்தின் சின்னமாகும். இது பூஜ்ஜிய பட்ஜெட்டில் ஒரு சுகாதார உத்தரவாதம்". - பிரதமர் நரேந்திர மோடி.
யோகா என்பது இசை போன்றது. உடலின் தாளம், மனதின் மெல்லிசை மற்றும் ஆன்மாவின் இணக்கம் ஆகியவை வாழ்க்கையின் சிம்பொனியை உருவாக்குகிறது. - பி.கே.எஸ். ஐயங்கார்
"யோகா என்பது ஒரு முறை ஏற்றப்பட்ட ஒரு ஒளி, அது ஒருபோதும் மங்காது. உங்கள் பயிற்சி சிறப்பாக இருந்தால், உங்கள் சுடர் பிரகாசமாக இருக்கும்". - பி.கே.எஸ். ஐயங்கார்.
யோகா என்பது சுயத்தின் பயணம், சுயத்தின் வழியாக, சுயத்தை நோக்கிய பயணம். - பகவத் கீதை
மனதின் ஒருமுகப்படுத்தல் என்பது அறிவு மற்றும் யோகா இரண்டிற்கும் பொதுவானது. யோகா என்பது தனி மனிதனை பிரபஞ்சத்துடன் அதாவது யதார்த்தத்துடன் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. - ரமண மகரிஷி.
யோகா என்பது மனதில் ஏற்படும் மாற்றத்தை அமைதிப்படுத்துவதாகும். - பதஞ்சலி.
யோகா உங்கள் வாழ்க்கையில் ஆண்டுகளையும், உங்கள் ஆண்டுகளில் ஆயுளையும் சேர்க்கிறது. - ஆலன் ஃபிங்கர்
யோகா செய்வதற்கு உங்களுக்கு தேவையான மிக முக்கியமான உபகரணங்கள் உங்கள் உடலும் மனமும் ஆகும். - ரோட்னி யீ
யோகா என்பது ஒவ்வொரு செல்லின் நடனமும், ஒவ்வொரு மூச்சின் இசையும் உள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குகிறது. - தேபாசிஷ் மிருதா
யோகா என்பது இளமையின் ஊற்று. உங்கள் முதுகெலும்பு எவ்வளவு நெகிழ்வாக இருக்கிறதோ அவ்வளவு இளமையாக இருப்பீர்கள். - பாப் ஹார்பர்
ஆலும் வேரும் பல்லுக்குறுதி, யோகா செய்தால் உயிருக்கு உறுதி!
ஒரு விளக்கை ஏற்றுவது போல, யோகா ஒரு முறை எறிந்தால் அணைந்து போகாது. நீங்கள் எவ்வளவு அதிகமாக பயிற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு சுடர் பிரகாசமாக இருக்கும்.
யோகா: அமைதியை உள்ளிழுப்பது, குழப்பத்தை வெளியேற்றுவது.
உள்ளே அழகான ஒரு வாழ்க்கையை உருவாக்குவதே யோகா; இது ஒரு விழிப்புணர்வு.
உடல் நலம், மன அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை அடைய யோகாவின் சக்தியைத் தழுவுங்கள். யோகா தின வாழ்த்துக்கள்!