கல்லீரலுக்கு ஏற்ற உணவுகள்:

Dr.R.Parthasarathy

ஒவ்வொரு ஆண்டும் கல்லீரலைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. (28-07-2023) இங்கு கல்லீரல் பலத்துக்கு ஏற்ற உணவுகள் பட்டியலை பார்க்கலாம்.

ப்ளு பெரிஸ் -  க்ரான் பெரிஸ்:

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ப்ளு பெரிஸ் -  க்ரான் பெரிஸ் பழங்கள் நமது நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை அதிகரிப்பதால் கல்லீரலை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

திராட்சை:

வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில், செல்களில் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்கவும், சேதத்தைத் தடுக்கவும், கல்லீரலில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கவும் திராட்சை உதவுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரெஸ்வெராட்ரோல் போன்ற தாவர கலவை இருப்பதால் திராட்சை கல்லீரலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

பீட்ரூட் ஜூஸ்:

பீட்ரூட் ஜூஸில் நைட்ரேட்டுகள் மற்றும் பீட்டாலைன்ஸ் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. நியூட்ரியண்ட் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, பீட்ரூட் ஜூஸானது இயற்கையான நச்சுத்தன்மை என்சைம்களை வளப்படுத்த உதவுகிறது.

கொழுப்பு மீன்:

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களான சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி ஆகியவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும், என்சைம் அளவை சாதாரணமாக வைத்திருக்கவும், இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுகின்றன என்பது தெரியவருகிறது.

கல்லீரலின் வேலை என்ன?

நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுகிறது

ரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது

உடலில் இருந்து நச்சுப் பொருட்களை நீக்குகிறது

பித்தத்தை வெளியேற்றி செரிமானத்திற்கு உதவுகிறது