கலைமதி சிவகுரு
நெல்லிக்காய் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்க்க கண்கள் குளிர்ச்சி அடையும். நெல்லிக்காயை பற்களினால் நன்கு மென்று தின்றுவர பற்கள் உறுதி பெறும்.
நாவல் பழம், அடிக்கடி சாப்பிட்டுவர கண் எரிச்சல், நீர் வடிதல் நிற்கும். நாவல் பழத்துடன் உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய் புண் குணமாகும். அடிக்கடி நாவல் பழம் சாப்பிட ரத்தம் விருத்தி ஆகும். சர்க்கரை நோய் குணமாகும்.
உடல் மெலிந்து இருப்பவர்களுக்கு வேர்கடலை, நேந்திர வாழைப்பழம் பாலும் சாப்பிட உடல் பருக்கும்.
ஆவாரம் பூ, கருவேப்பிலை, நெல்லிக்காய் சேர்த்து சாப்பிட்டால் நீரழிவு நோய் தாக்கம் குறையும்.
தூதுவளை, வல்லாரை, கறிவேப்பிலை மூன்றையும் பொடி செய்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் முருங்கை இலையை அரைத்து பற்றுப்போட அரிப்பு குறையும்.
சுரைக்காய் பச்சடி செய்து சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குணமாகும்.
ஒரு கப் இளஞ்சூடான தண்ணீரில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க சருமம் மிருதுவாக மாறும்.
சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர ரத்த சோகை குணமாகும்.
தொட்டாற்சுருங்கி இலை, வேர் இரண்டையும் பொடியாக்கி பாலில் கலந்து குடிக்க சர்க்கரை நோய் குணமாகும்.
வெற்றிலைச் சாறு எடுத்து தொடர்ந்து அருந்தி வந்தால் நுரையீரல் பலப்படும்.
சுக்குத் தூள், கிராம்பு, கல் உப்பு, மூன்றையும் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, பிறகு மிதமான சூட்டில் வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும்.
கீழாநெல்லி கரிசலாங்கண்ணி சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர கல்லீரல் குறை நீங்கும்.
சேப்பங்கிழங்கை புளி உடன் சேர்த்து சமைத்து உணவுடன் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். பேரிச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலை உணவுக்குமுன் சாப்பிட்டுவர மார்பு வலி குறையும்.
சித்திரத்தை பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொண்டைப்புண் ஆறும். தும்பைப் பூவை வாயில் போட்டு மென்று தின்றால் தொண்டைப்புண், தொண்டைவலி குணமாகும்.
மிளகு, துளசி இரண்டையும் மென்று சாப்பிட்டால் தலைவலி விரைவில் குணமாகும்.
கமலா பழம் உடல் உஷ்ணம் தணித்து பித்த கோளாறுகள் நீக்கும் வல்லமை உடையது.