தொப்புள் வழி எண்ணெய் சிகிச்சை - அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

நான்சி மலர்

ஆயுர்வேதத்தில் தொப்புளை 'நாபி' என்று கூறுகிறார்கள். நம் உடலில் இருக்கும் 72,000 சக்தி பாதைகளின் மையப்பகுதியாக தொப்புளை சொல்கிறார்கள்.

Navel oiling | Credits: Anahata organic

நல்லெண்ணெய் அரை ஸ்பூன் தொப்புளில் விட்டு நன்றாக சுற்றி தேய்த்தால் உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

Sesame oil | Credits: B&B Organics

தொப்புளில் சிறிதளவு கடுகு எண்ணெய் விட்டு நன்றாக தேய்த்து வரும் போது நரம்பு தளர்ச்சி சரியாகும். மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

Mustard oil | Credits: Style craze

விளக்கெண்ணெய்யை தினமும் தொப்புளில் மூன்று சொட்டு விட்டு நன்றாக மசாஜ் செய்துவர முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி குணமாகி உடலில் உள்ள எலும்புகள் வலிமைப் பெறும்.

Castor oil | Credits: Isha foundations

எலுமிச்சை எண்ணெய் பூஞ்சை காரணமாக வரும் வயிற்றுவலியை குணமாக்கும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிக்மெண்டேஷனை சரிசெய்ய உதவும்.

Lemon oil | Credits: amazon.in

தினமும் பாதாம் எண்ணெய்யை தொப்புளில் மூன்று சொட்டுவிட்டு தேய்த்துவர சருமம் பளபளப்பாகும். முகம் இளமையாக மாறி சுருக்கங்கள் மறையும்.

Almond oil | Credits: Purplle.com

ஆலிவ் ஆயிலை தொப்புளில் தொடர்ந்து தேய்த்துவர முடிவளர்ச்சி அதிகரிக்கும். மாதவிடாய் பிரச்சனை குணமாகும்.

Olive oil | Credits: StyleCraze

தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் தேய்த்துவர ஆண், பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கண்களில் உள்ள வலி, எரிச்சல் நீங்கும்.

Coconut oil | Credits: Coco Crush

நெய்யை சில துளிகள் தொப்புளில் விடும் போது அது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. வறண்ட சருமம், வெடித்த உதடுகள் இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்.

Ghee | Credits: Indiaphile

வேப்பெண்ணெய்யை தொப்புளில் விடும் போது சரும நோய்களான சொரியாசிஸ், பூஞ்சை தொற்றுக்களை நீக்கும். இது குடலில் குடற்புழுக்கள் உருவாகாமல் தடுக்கிறது.

Neem oil | Credits: Webdunia tamil
Husband And Wife
ஆண்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்!