குளிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்!

ம.வசந்தி

குளிர்காலத்தில் ஏற்படுகிற உடல்நல ஆபத்துகளுக்கு தூய்மை, பராமரிப்பு, தேவையான அளவு நீர், திரவ மருந்துகள் மற்றும் உடலை மூடுகின்ற முறையான ஆடை அணிதல் போன்ற எளிய நடைமுறைகளோடு பினவரும் பழக்கவழக்கங்களையும் கடைபிடித்தால் குளிர்காலம் மனதுக்கும் உடலுக்கும் இதமானதாக இருக்கும்.

Winter health tips | Imge Credit: Pinterest

குளிர்காலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க மற்றும் நோய்க் கிருமிகளை அகற்றுவதற்கு சோப் மற்றும் நீரை பயன்படுத்தி பல தடவைகள் நமது கைகளை சுத்தமாக கழுவுவது வைரஸ் தொற்று வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

Winter health tips | Imge Credit: Pinterest

கூட்ட நெரிசல் உள்ள இடங்களை தவிர்ப்பது அதிலும் ப்ளூ காய்ச்சல் பரவும் காலங்களின் போது தொற்று பரவாமல் இருப்பதற்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Winter health tips | Imge Credit: Pinterest

அதிகாலை நேரத்திலும் பின் மாலை பொழுதிலும் உடலை மறைக்கும் படியான ஆடைகளை அணிந்து உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வது குளிருடன் தொடர்புடைய நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவும்.

Winter health tips | Imge Credit: Pinterest

அதிக அளவில் நீர் பருகுவது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, கனமான ஆடைகளை உடுத்துவது நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தி பருவ நிலைக்கு நம் உடலை தயார் படுத்தி விடும் .

Winter health tips | Imge Credit: Pinterest

சுவாச பாதை ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்சனைகளை தடுக்க வெளியில் செல்லும்போது முக கவசங்களை பயன்படுத்துங்கள்.

Winter health tips | Imge Credit: Pinterest

DEET - ஐ உள்ளடக்கிய கொசுவிரட்டி மருந்துகள் பிக்காரிடின் அல்லது சருமத்தின் மீது தடவக்கூடிய சிட்ரோனெல்லா போன்ற இயற்கையான திரவங்களைப் பயன்படுத்துவதன் மூலம்கொசுக்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Winter health tips | Imge Credit: Pinterest

வாளிகள், பூந்தொட்டிகள் மற்றும் பழைய டயர்கள் போன்றவற்றில் தேங்கியிருக்கக்கூடிய தண்ணீரை அகற்றி உலர்வாக பார்த்துக் கொள்வது, மற்றும் பணியிடங்கள் வீடுகளில் ஜன்னல்களில் கொசுவலைகள் பயன்படுத்துவது கொசு தொல்லையிலிருந்து விடுபட உதவும்.  

Winter health tips | Imge Credit: Pinterest

வளர்ப்பு பிராணிகளின் உணவு பாத்திரங்களில் உள்ள நீரை அடிக்கடி மாற்றுவதால் தொற்று அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும்.

Winter health tips | Imge Credit: Pinterest

கீழ்வாதம் மட்டு மற்றும் மூட்டு பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள் குளிர்காலத்தில் மூட்டு நெகிழ்வுத் தன்மையை பேணுவதற்காக மிருதுவான உடற்பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடுவதால் விறைப்பு தன்மையிலிருந்து நிவாரணம் பெற முடியும் .

Winter health tips | Imge Credit: Pinterest

மேலும் சூடான நீரில் குளிப்பதோடு ஒத்தடம் கொடுப்பதும் மூட்டு வலி பிரச்சனைக்கு குளிர்காலத்தில் தீர்வாக அமையும்.

Winter health tips | Imge Credit: Pinterest

குளிர்ச்சியான பருவ நிலையில் உலர்ந்த சருமம் மற்றும் தோலழற்சி பிரச்சனை ஏற்படும் என்பதால் சூடான நீரில் குளிப்பதை தவிர்த்து போதுமான அளவு தண்ணீர் பருகுவது  பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு உதவியாக இருக்கும்.

Winter health tips | Imge Credit: Pinterest

உலர்ந்த சரும பிரச்சனை இருப்பவர்கள் குளித்த பின்பு எண்ணெய் அடிப்படையிலான மாய்ஸ்டரைசரைகளை சருமத்தின் மீது தடவுவது ஈரப்பதத்தை தொடர்ந்து தக்க வைக்க உதவும்.

Winter health tips | Imge Credit: Pinterest

மேற்கூறிய செயல்முறைகளை செய்வதன் வாயிலாக குளிர்கால பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.

Winter health tips | Imge Credit: Pinterest
Giraffe | Imge Credit: Pinterest
ஒட்டகச்சிவிங்கி – ஆச்சரியமான 13 தகவல்கள்!