மார்ச் மாசம் வர்றதுக்குள்ள இத பண்ணுனா நீங்கதான் ராஜா!

நான்சி மலர்

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாக்க 10 முக்கியமான குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Summer hacks

வெயில் தொடங்கும் முன்பே தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், அதிகப்படியான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

Drinking water

கோடைக்கு ஏற்றவாறு மெல்லிய பருத்தி (Cotton) ஆடைகளைத் தயார் செய்து கொள்ளுங்கள். வெள்ளை ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

White cotton dress

புற ஊதாக்கதிர்களின் (UV rays) தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க நல்ல தரமான சன்கிரீன் (Sunscreen) உபயோகிக்கத் தொடங்குங்கள்.

Sunscreen

எண்ணெயில் பொரித்த உணவுகள், காரமான உணவுகள் மற்றும் அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

No oily foods

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே உங்கள் வீட்டு மின்விசிறிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களை (AC) சர்வீஸ் செய்துவிடுங்கள்.

Air conditioner and fan

வெயில் காலத்தில் தினமும் இருமுறை குளிப்பதையும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Bathing twice

வேலைகளை அதிகாலையிலோ அல்லது மாலை வேளையிலோ முடிக்கப் பழகிக்கொள்ளுங்கள். மதிய வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்கத் திட்டமிடுங்கள்.

Summer heat

வீட்டின் ஜன்னல்களுக்கு மெல்லிய திரைச்சீலைகள் மற்றும் மொட்டை மாடியில் வெப்பத்தைத் தடுக்க கூலிங் பெயிண்ட் (Cooling Paint) அடிப்பது வீட்டின் வெப்பநிலையைக் குறைக்க உதவும்.

Cooling paint

விலங்குகளுக்கும் தாகம் எடுக்கும் என்பதால், வீட்டு பால்கனி அல்லது மொட்டை மாடியில் பறவைகளுக்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள். உங்கள் செல்லப் பிராணிகளை வெயிலில் கட்ட வேண்டாம்.

Give water to animals

Heat Stroke அல்லது மயக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் எப்போதும் எலக்ட்ரோல் (ORS) பொடிகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.

Learn to give first aid
Human body facts
மனித உடல்: கற்பனைக்கும் எட்டாத 10 விசித்திர உண்மைகள்!