சி.ஆர்.ஹரிஹரன்
வாழைப்பிஞ்சுடன் பருப்பு, தேங்காய் சேர்த்து காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டு வந்தால் குடல் சம்பந்தமான வியாதிகள் விலகும்.
ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன் இரண்டு டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து தண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர மூட்டு வலி குணமாகும்.
பச்சை நிலக்கடலையுடன், நீர் சேர்த்து அரைத்தெடுத்த ஒரு டம்ளர் பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.
சந்தன எண்ணையை நெஞ்சில் பூசி வர மூச்சுத்திணறல் குணமாகும்.
வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.
வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி, அத்துடன் முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.
இரண்டு கிராம்பு, கற்பூரம், ஒரு ஸ்பூன் ஓமம் இவற்றைப் பொடித்து வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் கழித்து வாய் கொப்பளித்தால் ஈறுகளின் வீக்கம் குறையும்.
அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால் எலுமிச்சைச் சாற்றில் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வர நெஞ்சு எரிச்சல் நீங்கி விடும்.
தக்காளி பழச்சாறுடன், தயிர் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மறையும்.
வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு பனங்கற்கண்டை சேர்த்து வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி விலகும்.
கற்றாழைச்சோறு மற்றும் மஞ்சள்தூளை அரைத்து, விளக்கெண்ணைய் விட்டு சூடுபடுத்தி நகத்தின் மீது பூச நகச்சுத்தி குணமாகும்.