ஆர்.ஜெயலட்சுமி
மழைக்காலத்தில் காலணிகள் இன்றி வெளியே நடந்த செல்லக்கூடாது. குளிர்பானங்கள் ஐஸ்கிரீம் இவற்றை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.
மூச்சுப் பயிற்சி ஆவி பிடித்தல் கட்டாயம் செய்யவேண்டும். வைரஸ் பரவலை தடுத்துக்கொள்ள வெந்நீரில் கல் உப்பு போட்டு நன்றாக வாய் கொப்பளித்தல் உரிய தடுப்பு முறையாகும்.
காலையில் இஞ்சி டீ மதியத்தில் சுக்கு பால் இரவு நேரங்களில் சூடான பாலில் மஞ்சள் தூள் மிளகுத்தூள் பனங்கற்கண்டு சேர்த்து பருகவேண்டும்.
இரவு ஒரு டீஸ்பூன் தேன் குடிக்கலாம். ஒரு டீஸ்பூன் தேனுடன் மிளகுத்தூள் சேர்த்து அருந்தினால் வறட்டு இருமல் சளி வராது.
இரவு உணவை இரவு ஏழு மணிக்கு சூடாக சாப்பிட வேண்டும் வெளியில் சென்று வந்த உடன் வெந்நீரில் மஞ்சள் பொடி சேர்த்து கை கால்களை கழுவவேண்டும்.
குளிர்ச்சி அதிகம் சேர்ந்தால் மூட்டு வலி அதிகரிக்கும் மூட்டு வலி உள்ளவர்கள் ஈரத்தரையில் வெறும் காலால் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
சிலர் குளிருக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்குவார்கள். அப்படி உறங்கினால் சரியானபடி ஆக்ஸிஜன் கிடைக்காது.
மழைக்காலத்தில் வீட்டின் தரையை டெட்டால் கொண்டு துடையுங்கள். தரையில் கிருமிகளின் ஆதிக்கம் இல்லாமல் இருக்கும்.
குளிர்காலத்தில் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க பச்சை காய்கறிகள் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசு மேட் உபயோகிக்கலாம் அல்லது காய்ந்த மாவிலை துளசி இலை வேப்பிலைகளால் புகை போடலாம்.