சி.ஆர்.ஹரிஹரன்
சித்தரத்தையை எடுத்து இடித்துப் பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொண்டைப் புண் ஆறும்.
சின்ன வெங்காயத்தை, பசு நெய்யில் வதக்கி அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், அடிவயிறு சதை குறையும்.
வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்கள் புதினாத் துவையல் செய்து சாப்பிட்டு வருவது நல்லது.
வெங்காயத்தையும், கேரட்டையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நெஞ்சு வலி வராமல் இருக்கும்.
நாவல் பழத்தை எடுத்து அதனுடன் உப்பு கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் ஆறி விடும்.
கசகசாவை பாலில் அரைத்துக் குடித்து வந்தால் ஜலதோஷம் நீங்கி விடும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை வேக வைத்து வெண்ணெய் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
வில்வம் இலையை பயன்படுத்தி சிறுபயறு சேர்த்து சமைத்து உண்ண, பால் குறைவாக இருக்கும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.
வெள்ளைப்பூசணிச் சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் அருந்தி வர ரத்தம் சுத்தமாகும். இதனால் நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
கொழுந்து வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி அதை நன்றாக அரைத்து நகத்தில் வைத்துக் கட்டினால் நகச்சுற்று குணமாகி விடும்.
நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் செவ்வாழைப்பழத்தை உட்கொண்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
நெல்லி இலையை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.