கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்யனும்?

Dr.R.Parthasarathy

ஆரோக்கியமான உணவைப் அருந்துங்கள். தானியங்கள், பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளில் நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளதால் இவை கல்லீரலை பாதுகாக்கும்.

இரத்த மாற்றம் (blood transfusion) செய்து கொள்ளும்போது,  ஹெபடைடிஸ் ஏ, பி, சி நோயைத் தவிர்க்க கவனமாக இருக்கவும்.

நீங்கள் கழிவறையை உபயோகப்படுத்தி வரும்போதெல்லாம், உங்கள் கை களைக் கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நேரம் ஒதுக்கி, தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் எடையை அளவாக வைக்கவும். அதிக எடை தீவிர கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும்.

மது அருந்துவதை தவிர்க்கவும். இது கல்லீரல் பாதிப்பைத் தடுக்க அதிகம் உதவும். போதைப்பொருள் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்.

பாதுகாப்பான உடலுறவு கொள்ளவும். ஆணுறைகளைப் பயன்படுத்தவும்.

மருத்துவ ஆலோசனைத் தேவைப்படும்போது அவசியம் மருத்துவரை அணுகவும்.