உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இந்திய நிறுவனங்கள் பின்னடைவு!

உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இந்திய நிறுவனங்கள் பின்னடைவு!

லகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலை டைம் இதழ் ஆய்வு செய்து தயார் செய்துள்ளது. இதற்காக 750 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 8 நிறுவனங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

டைம் இதழ் உலகில் முன்னணி நிறுவனங்களாக கருதப்படும் 750 நிறுவனங்களை ஆய்வு செய்து அவற்றை உற்பத்தி, வருவாய், ஊழியர்கள் திருப்தி, சுற்றுச்சூழல், சமூக பொருளாதாரத்தில் தாக்கம் என்று பல்வேறு நிலைகளில் வகைப்படுத்தி அவற்றில் எவை முன்னிலை என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது.

இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஆல்பாபெட், மெட்டா, யூடியூப் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் முதன்மை இடத்தை பிடித்துள்ளன. உற்பத்தி மற்றும் தொழில் நிறுவனங்களை காட்டிலும் தொழில்நுட்ப நிறுவனங்களே பட்டியலில் பெரும்பான்மையாக இருக்கின்றன. முன்னிலை பட்டியலிலும் இவைகளே பெரும்பான்மையாக இருக்கின்றன.

உலகம் முழுவதும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இந்தியாவிலிருந்து 8 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதல் 100 இடத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரே நிறுவனம் மட்டுமே உள்ளது. இவ்வாறு இன்போசிஸ் நிறுவனம் 64வது இடத்தை பெற்று இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களே முதன்மை பட்டியலில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளன.

மேலும் இந்தியாவைச் சேர்ந்த விப்ரோ நிறுவனம் 174 வது இடத்தையும், மகேந்திரா குழுமம் 210 வது இடத்தையும், ரிலையன்ஸ் நிறுவனம் 248 இடத்தையும், ஹச் சி எல் டெக்னாலஜி 262 வது இடத்தையும், ஹெச்டிஎஃப்சி பேங்க் 418 வது இடத்தையும், பிஎன்எஸ் குளோபல் சர்வீஸ் 596 வது இடத்தையும், ஐடிபி 672 வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.இவ்வாறு டைம் இதழ் நடத்திய ஆய்வின் மூலம் தயார் செய்யப்பட்டுள்ள உலக தரவரிசை பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்த 8 நிறுவனங்கள் மட்டுமே இடம் பிடித்திருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com