0,00 INR

No products in the cart.

சென்னையில் 2-வது விமான நிலையம் துவங்க 4 இடங்கள் பரிந்துரை: மத்திய அமைச்சர்!

சென்னையில் 2-வது விமான நிலையம் கட்டுவதற்கான பணிகள் எப்போது துவங்கப் பெறும் என்று இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் வி.கே.

சிங் பதிலளித்ததாவது:

சென்னையில் 2-வது விமான நிலையம் கட்டுவதற்கு ஏற்ற நான்கு இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இந்த இடங்களை ஆராய்ந்து எது சிறந்தது என்று அறிக்கை தருமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர், மாமண்டூர் மற்றும் காஞ்சியில் பரந்தூர், ஸ்ரீபெரும்புதூர் என நான்கு இடங்கள் இரண்டாவது விமான நிலையம் கட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பகுதிகளிலுள்ள விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சில பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றை சரிசெய்தபின்னர் சென்னையில் 2-வது விமானநிலையம் விரைவில் உருவாக்கப் படும். மேலும் கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சென்னை விமான நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வருகிறது

இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தமிழக பொறியியல் படிப்புகள்; தரவரிசைப் பட்டியல் வெளியீடு! 

0
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப் பட்டது.  -இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்ததாவது:  தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது....

தங்கம் விலை அதிரடி சரிவு: மக்கள் மகிழ்ச்சி! 

0
தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.   –இதுகுறித்து சென்னை தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்ததாவது:   கடந்த ஆண்டு ஏற்பட்ட...

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி; சென்னையில் ஏற்பாடுகள்! 

0
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதன்முறையாக நடத்தப்பட உள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வருகிற செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில...

இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமம் ரத்து! 

0
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.  இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் இந்த கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம்! 

0
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்று நாளை காலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.   –இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...