0,00 INR

No products in the cart.

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வாழ்த்து அட்டைகளை அனுப்பும் பழக்கம் லண்டனிலுள்ள விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தின் டைரக்டராக இருந்த சர் ஹென்றிகோல் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஜான்கால்சாட் ஹார்ஸ்லே என்ற ஓவியரைக் கொண்டு 1843ல் வாழ்த்து அட்டைக்கு வடிவமைப்புச் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார் கோல். இந்த முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல் மடிப்பு இல்லாத ஒரே அட்டைதான். அதில் மூன்று சித்திரங்கள். நடுவிலுள்ள படத்தில் விக்டோரியன் காலத்து குடும்பத்தினர் பண்டிகை விருந்து மேஜை முன் நண்பரின் நல்வாழ்வுக்காக மதுக்கோப்பையை உயர்த்தியபடி அமர்ந்திருக்கிறார்கள். கோல் இந்த முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை 1000 பிரதிகளே அச்சிட்டார். இன்று இதில் 12 மட்டுமே கிடைத்திருக்கிறது.

Previous articleசாண்டாக்ளாஸ் என்னும் பெயர்கூட செயிண்ட் நிக்கோலஸ் என்னும் ஒரு புனிதரின் பெயர் தழுவல்தான். இவர் தன் சொத்துகளுக்கெல்லாம் அன்புப்பரிசு வழங்குவதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர். டச் மக்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவை சிண்டிகிளாஸ் என்றனர். அதிலிருந்து சாண்டாகிளாஸ் என்ற பெயர் வந்தது.
Next articleவட இந்தியாவில் உள்ள அவந்தியில் மகாகாளர் திருக்கோயிலும் திருக்குளமும் உள்ளன. அந்தக் கோயிலுக்குச் செல்பவர்கள் பல படிகள் பூமிக்குள் இறங்கி குகை போன்ற வழியே சென்று மகாகாளேஸ்வரரைக் கண்டு வழிபட வேண்டும். இங்குள்ள திருக்குளத்திற்கு ஒரு வினோதமான தன்மை உண்டு. பன்னிரண்டு ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா விழாவின்போது ஒவ்வொரு திசையிலிருந்தும் பார்த்தால் தண்ணீர் ஒவ்வொரு நிறமுடையதாகத் தெரியும்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles