வரப்போகும் பிக்பாஸ் சீசன் 7.. 2ஆம் வீட்டில் தங்கபோவது யார்? கசிந்தது தகவல்!

BIG BOSS 7 TAMIL
BIG BOSS 7 TAMIL

பிக்பாஸின் அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் 7ன்புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து வருகிறது. வெளிநாடுகளிலும், இந்திய மொழிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழிலும் 6 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து வரவிருக்கும் 7வது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டு, அதன் புரோமோக்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில், பிக்பாஸ் 7 நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்பது ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது. அவர்களுக்கெல்லாம் பதில் தரும் வகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பிக்கும் என்கிற விபரத்தை ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

வழக்கமாக பிக்பாஸில் ஒரே ஒரு பெரிய வீடு இருக்கும். அதில், ஆண்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்கும். இந்த முறை 2 வீடு என கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்த நிலையில் கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, நடிகர் அப்பாஸ், நடிகை தர்ஷா குப்தா, நடிகை அம்மு அபிராமி, வி.ஜே ரக்சன், ஜாக்லின், காக்கா முட்டை விக்னேஷ், ஸ்ரீதர் மாஸ்டர், மாடல் ரவி குமார், மாடல் நிலா, நடிகை ரச்சிதா கணவர் தினேஷ், ரேகா நாயர், சந்தோஷ் பிரதாப், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பப்லு, அகில், சோனியா அகர்வால் வி.ஜே. பார்வதி ஆகிய 18 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 2வது வீட்டில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வீட்டில் ஓவியா, ஆரி, சாண்டி, அசீம் உள்ளிட்டோர் பங்கேற்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com