மைனா - அமுதவாணன்
மைனா - அமுதவாணன்

பிக்பாஸில் தீபாவளி கொண்டாட்டம் ! தலைவரானார் குயின்சி!

பிக்பாஸின் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் வருவதால் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. வார நாட்களில் நடக்கும் சண்டைகளின் பஞ்சாயத்து அன்று நடைபெறும். இந்த வாரம் நடைபெற்ற ஆஸிம் மற்றும் ஆயிஷா சண்டை பெரும் விவாதத்துக்குள்ளானது.

அதில் அசிம் தரக்குறைவான மற்றும் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதால் அனைவருடைய கண்டிப்புக்கு ஆளானார். அதனால் மற்ற ஹவுஸ் மேட்கள் அவருக்கு ரெட் கார்டு அளித்தது பரபரப்பாக பேசப்பட்டது.. அதே போல் ஆயிஷாவும் செருப்பை காட்டியதற்கு மிகவும் மனம் வருந்தினார். அதன் பிறகு Gp. முத்து தனது மகனை பிரிந்து இருக்க முடியாது என கூறி போட்டியில் இருந்து வெளியேறியதும், பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிக்பாஸ்
பிக்பாஸ்

மறுநாள் ஞாயிற்று கிழமை தனலட்சுமி மற்றும் அசல் கோளாறு பிரச்சனை விவாதிக்கப்பட்டது. பின்னர் கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு பல்வேறு டிப்ஸ்களை வழங்கினார். மைனா விடம் போட்டியாளர்கள் குறித்த வாசகங்கள் நிரம்பிய அட்டை கொடுத்து கருத்து கேட்கப்பட்டது. இறுதியாக முதன் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேறினார்.

குயின்சி
குயின்சி

திங்கள் அன்று வீட்டு தலைவருக்கான போட்டியில் குயின்சி வென்று வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் எலிமினேஷன் டாஸ்க் நடைபெற்றது . ஹவுஸ் மேட்கள் ஓவ்வொருவரும் இருவரை தேர்வுசெய்தனர். பின்னர் தீபாவளி புத்தாடைகளுடன் வீடு அலங்கரிக்கப்பட்டு தீபாவளி செலிப்ரேஷன் சிறப்பாக நடைபெற்றது. அமுதவாணன் மற்றும் மைனா இருவரும் தீபாவளி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். போட்டியாளர்களுக்கு ஏராளமான பரிசுகளுடன் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com